என் வாழ்வு
கட்டிப் போட்டிருக்கும்
என் செயற்பாடுகள்
உறையவைக்கப்பட்ட
என் திட்டங்கள்
சுருக்கிடப்பட்ட
என் ஆசைகள்
சொல்லி மாளாத
வலிகள் அத்தனையும்
என் பெயர் கொண்ட
இரகசிய குறியீட்டால்
கட்டியாளப்படுகின்றன
கல்சிய பாறைகளாய்
என் ஆற்றல்கள்
படிந்து போயின.
அவ்வப்போது
என் ஆளுமைகளை
கொப்பி கட் பேஸ்ட்
என்றெல்லாம் முடக்கி விடுகிறாய்.
என் உணர்வுகளை
உடைத்து விட்டு
நதியாய் நீ புறப்படுகிறாய்
என் கால்கள்
உயிர்த்து விட்டன இப்போது
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
விரைவில் நடக்க இருக்கிறேன்.
நீ சொன்ன வட்டத்திற்குள் மட்டும்!