Monday, October 16, 2017

உலகின் தலை சிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்

எங்கள் மகன் உமர் காலித் பற்றியும் அவருக்கு நாங்கள் வழங்கும் உணவு எங்கள் வளர்ப்பு முறை ஆரோக்கியம்  கல்வி என பல கேள்விகள் தினமும் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறன,

என்னது எந்த ஒரு தடுப்பு ஊசியும் போடலயா?

ஒரே நாளில் 3 ஐஸ்கிரீம் கொடுக்கிறீங்க?

என்னது மூன்று வயசாகியும் இன்னும் நேர்சரி அனுப்பலயா?

இவர் பேசவே மாட்டாரா?

சரியான பிரலி போல!

(என் குழந்தையை குழந்தையாகவே வளர்க்க விரும்புறன்.யாருடைய அவசரத்துக்கும் அவன் கற்க வேண்டும் என்றோ வழக்காடு மன்றில் வாதாட வேண்டும் என்ற தேவையோ அவனுக்கு இப்போதைக்கு இல்லை.எங்கயாவது கற்பிக்காமல் விளையாட இடம் உண்டாம் என் றால் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விடுவோம்)

மேற்படி பல கேள்விகளுக்கு பின்வரும் கட்டுரை பதிலளிக்கும் என நம்புகிறேன்,

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

👏மதிக்கத்தக்க மனநிலை.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

மாற்றம் ஒன்றே மாறாதது...

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

இணைய வழி பதிவு -  உரியவருக்கு நன்றி

Sunday, October 15, 2017

-பொம்புள- பத்தி- 03

அவளுக்கு என்ன பிடிக்குமோ அதனை தான் செய்வாள்.மற்றவர்களுக்காக வேண்டி தன்னை மாற்றியமைப்பதில் ஒருபோதும் உடன்பாடு இருந்தது கிடையாது. அவளை படுமோசமாக விமர்சிப்பவர்கள் குறித்து விசாரிப்பதானும் அநாவசியமாகப்பட்டது,பொம்புள என்கிற ஒரே காரணத்துக்காக அவளை வீழ்த்த நினைப்பதனை நன்கறிவாள்.அவளிடம் சிரித்துப்பேசும் பலருக்கு முகத்துகக்கு முகம் பேச தையரியமிரிக்காது,ஆனால் அவளுக்கு மனதில் என்ன படுகிறதோ அதனை பேசிவிடுவாள்,தாம் சொல்ல நினைப்பதனை விழுங்காமல் பயப்படாமல் சொல்வதில் உள்ள திருப்தி எதிலும் கிடைப்பதில்லை.அவளுடன் பலர் முகத்துக்கு முகம் பேச துப்பற்று பின்னாடியே பயந்து கொண்டு பேசுவார்கள் அப்படி கதைத்தவர்கள் யாரென விசாரிப்பதும் இல்லை.புன்னகையால் கடந்து செல்வது போல் சந்மோஷம் எதிலும் இல்ல.

பொதுவாக ஆண்கள் சிலருக்கு பெண்களின் முன்னேற்றம் தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருப்பதில்லை,  அந்த மனநிலை திருத்த முடியாதது. அதற்கு பெண்ணானவள் விவாதத்திற்கு செல்வாளாக இருந்தால் முட்டாள் தனமாகவே எப்போதும் கருதுவாள்,

ஒரு முறை பிரியாவிடை நிகழ்வொன்றில் அவள் பிரியாவிடைபெறும் நபரை வாழ்த்திப்பேசும் போது இருப்புக்கொள்ள முடியாத சமயம் போதிக்கும் இரு ஆண்கள் ஆஹா ஓஹோ என காடையர்கள் போன்று சத்தம் எழுப்பினர்,அதனைப்புரிந்து கொண்ட பணிப்பாளர் தக்கவிதத்தில் எடுத்துக்கூறினார்,அந்த பணிப்பாரும் பெண் என்பதனால் இரு சமயவாதிகளும் இன்னும் இருவரை சேர்த்துக்கொண்டு சபை இங்கிதம் தெரியாது கூக்கிரலிட்டு அவரின் பேச்சை செவிமடுக்காதிருந்தனர்,இந்த விடயத்தினை நாங்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்று யாரிடமும் ஆலோசனை பெற முடியாது,இது ஒரு வருத்தம்  அதுவும் குணப்படுத்த முடியாத வருத்தம்.இதற்கு பெயர் தாங்கிக்கொள்ளமுடியாமை எனலாம்.அதாவது நாங்களே பொட்டயல் போல உட்காந்திருக்க பொம்புள என்ன பேசுறது?என்ற உளைச்சல் தான்.

இப்படிபட்ட லூசுகளை எங்க ஊரில் குத்தியில் போடனும் என்பார்கள்.அதற்கும் அடங்குங்களோ தெரியாது.எனவே நாம் செல்லும் திசையில் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியது தான்.பெண்ணானவள் இதுகளை திரும்பி பார்த்துக்கொண்டும் பதில் அளித்துக்கொண்டும் இருந்தால் நேரம் தான் வீணாகும்.
இதுவும் கடந்து போவாள் பொம்புள, ,
தொடர்வாள்...

Friday, October 13, 2017

பிரியாணி - சிறுகதை

நீண்ட நாட்களுக்குப்பிறகு அவள் வந்திருப்பதால் ஆர்வத்துடன் சமையலில் ஈடுபட்டேன் என்னுடைய சகோதரி வந்திருப்பதான உணர்வு.மகன் உமர் காலித்திற்கு  அவள் மீதான ஈர்ப்பு இதுல தான் என்று சொல்ல முடியாதவாறு ஏதோ ஒர் இறுக்கம். வழமையாகவே யாரும் வீட்டுக்கு வந்தால் என்னுடன் ஒட்டிக்கொண்டே இருப்பான்.சமைப்பதற்கு விடமாட்டான் "தூக்கு மா ..பபாவ தூக்குமா" என்பான்.நானும் அவரை அழைத்து "குழந்தையை வைத்திருந்தால் தான் சாப்பாடு இல்லாட்டி கடையில் வாங்கி கொடுப்போம்" என்பேன்.  வந்திருப்பவர்களுடன் பேசவோ கிட்ட போகவோ மாட்டான்.ஆனால் வழக்கத்துக்கு மாறாக அன்று அவன் என் கிட்ட வரவே இல்ல.
"வாணி வாணி "என பல முறை சொல்லியவாறு ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தான்..
எல்லோரரையும் அன்டி"என அழைக்கும் குழந்தை அவளை பெயர் சொல்லியே அழைப்பான்.அது அவளுக்கும் பிடித்திருந்தது."மகன் அன்டி என்று சொல்லுங்க" என்ற போது "விடுங்க அவன் சொல்லட்டும் பெயர் வைக்கிறது கூப்பிடத்தானே" என்றாள்.அது அவளுக்கும் பிடித்திருந்தது என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்.  அவள் மீது தனிப்பிரியம் குழந்தைக்கு இருக்க காரணம் அவளின் அன்பான நடத்தைகள் தான்.பொதுவாக குழந்தைகள் அவ்வளவு சீக்கரத்தில் எல்லோரிடமும் பழகுவதில்லை.அவர்களுக்கு பிடித்திருந்தால் மாத்திரம் தான் முகத்தை பார்க்கவே செய்வார்கள்.அதற்கு குழந்தை உமர் காலித்தும் விதிவிலக்கல்ல. அவள் முதல் தடவையாக வீட்டிற்கு வந்திருந்த போது சிதறிக்கிடந்த புத்தகங்களை அடுக்கி குழந்தையின் கைகளாலே அவற்றை புத்தக ராக்கையில் அடுக்கவும் செய்திருந்தாள்.அது அவனுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்க வேண்டும். தினமும் புத்தகங்களை ராக்கையிலிருந்து கீழே இழுத்துப்போடுவான் உமர்.நானும் அவன் தூங்கிய பிறகு அழகாய் அடுக்கி வைப்பேன்.திரும்பவும் இழுத்து வீசுவான் நானும் அடுக்கி வைப்பேன்.வாணி குழந்தையிடம் புத்தகங்களை கொடுத்து அடுக்கச் செய்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது."இந்த வேலய நாம இதுவரை செய்யலயே"என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.அவள் செயற்பாடுகள் குழந்தையைக் கவர்ந்தது போல் என்னையும் ஈர்த்திருந்தது. அவள் மீதான பிடிப்பின் வெளிப்பாடு அன்றே அவளருகில் போய் இருந்து கொண்டான்.அதன் பிறகு வட்சப் இல் அவளை அழத்து குரல் அனுப்பியிருந்தான்.அதற்கு அவள் அனுப்பிய பதிலை எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்டான்.. பொதுவாக பெண்ணின் வசீகரமான இனிமையான குரல் ஆண்களைக் கவர்வது சாதாரணமானதுதான்.ஆனால் குழந்தைக்கு அவள் குரலில் இருந்த அன்பு கனிவு  ஈர்ப்புக்கு காரணமாயிற்று.

முதல் சந்திப்பிலேயே "நான் நல்லா பிரியாணி செய்வேன்"என்றது மாத்திரமல்லாது வீட்டவந்து செய்து தருவதாகவும் உத்தரவாதமளித்தாள்.அவள் வீட்டுக்கு வரும் அன்றைய தினம் பிரியாணி சமைப்பதற்கு தேவையான அனைத்துப்பொருட்களையும் வாங்கி வைத்தேன்.மிகுதிப்பொருட்களை தானே வாங்கி வருவதாக கூறியிருந்தாள்.உண்மையிலே இவளுக்கு பிரியாணி செய்யத்தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கும் கணவருக்கும் இருந்தது.இது தொடர்பில் இருவரும் உரையாடிக்கொண்டோம்.ஏனெனில் திருமணமான பின்னர் தனிக்குடித்தனம் நடாத்தும் பெண்களுக்கு சமைக்கத்  தெரிந்திருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம்.ஆனால் அம்மாவுடன் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் வாணிக்கு சமைக்கத்தெரிந்திருக்குமோ? என சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.அத்துடன் நீரை கொதிக்க வைக்கவும் அவித்த முட்டையை உரிக்கவும் தக்காளி வெட்டவும் தெரியும் எனும் பெண்களிடையே பிரியாணி சமைக்கவும் முடியுமென்றால் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை.

யாருடனும் பழகிப்பார்க்காமல் தம் விருப்பத்திற்கு கட்டுகதையை பறக்கவிடுட்டு அதில் இன்புறும் மனநிலையானது முன்பு ஊடகவியலாளர்களிடம் காணப்பட்ட பறவைக்காய்ச்சல் இப்போ இலக்கியவாதிகளுக்கும் தொற்றியிருந்தது.அந்தப்பறவைக்காய்ச்சல் பிடித்த நபர் ஒருவர் அவள் குறித்த பிழையான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருந்தார் அதன் வெளிப்பாடுதான் அவளைப்பற்றிய பரப்புரைகள்.

நான் பழகும் நண்பிகளின் இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் குறித்த தேடல்கள் ஒரு போதும் என்னிடமிருந்ததிலை.ஆனால் எத்தனையோ ஆண்கள் பெண்களின் மீது அக்கறை கொண்டு விசாரிப்பதுண்டு.ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தாளி அடுக்கடுக்கான எரிச்சல் தரும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.பொதுவாக அவள் என்று விசாரிப்பதானது உள்ளூர கோபத்தினை ஏற்படுத்தவல்லது. "அவள் சஹானா கல்யாணம் முடிச்சவள் தானே?இப்ப பிரிஞ்சிட்டாளோ?"
"தெரியாது"
"ஏன் நீங்க கேட்பதில்லையா?"
"எனக்கு தேவல்லாத கேள்வி அது எனவே கேட்பதில்லை"
"உங்கட நல்ல பிரண்டோடதானே சுத்திக்கிட்டிருக்காள்"
"..............."
"அன்டைக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவங்க எல்லாரும் அவள்ட கதயத்தான் கதைச்சாக"
"..............."
"நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல"

இதுவரை எரிச்ச லுடன் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவருக்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்து அந்த இடத்தை விட்டகல வேண்டும் என்று தோன்றினாலும்  வீட்டுக்கு வந்த விருந்தாளி என்ற இங்கிதத்துடன் பதிலளிக்கலானேன் "பி.எச்.டி க்கு தகவல் தேடுறீங்களோ இல்லையோ பொம்பளயல்ற பலாய் மட்டும் நல்லா தேடுறீங்கன்டு விளங்குது " என்று சிரித்து தொடர்ந்தேன் " நானா நீங்க இத மாதிரி ஏற்கனவே சாஹிராவ பத்தியும் அவள்ட கல்யாண வாழ்வ பற்றியும் கேட்டிங்க.இப்ப யாரோடும் தொடர்பா?என்டும் கேட்டீங்க.ஆனால் நீங்க விசாரித்த இவங்க இரண்டு பேரும் நல்ல எழுத்தாளர்கள்.அவங்கட புத்தகத்த வாசிச்சிட்டு அதிலுள்ள விடயங்கள கூட கலந்துரையாடலாம்.நான் கூட அவர்கள்ட எழுத்து குறித்து நிறைய பேசுவன்."இவ்விதம் நான் சொல்லிட்டு இருக்கும் போதே அவர் "இதென்னடா வாப்பா பெரிய வம்பா போச்சு உங்கட பிரன்ட் தானே தெரிஞ்சிருக்கும் என்டு கேட்டன்"
"சரி இத தெரிஞ்சு கொண்டு என்ன செய்யப்போறிங்க?உங்களுக்கு ஏதும் பிரயோசனம் இருக்கா?அவ யார கலியாணம் முடிச்சா நமக்கென்ன வந்தது?நான் தனிப்பட்ட கதைகள விசாரிப்பதில்ல.." என்று அடக்கியிருந்த கோபத்தை சற்று உயர்ந்த தொணியிலே வெளிப்படுத்தினேன்.இன்னும் நிறைய பேசத்தோனிற்று.ஆனாலும்
அந்த நேரமாக பார்த்து கணவர் வரவும் தேநீர் ஊற்றலாம் என குசினிப்பக்கம் நழுவி விட்டேன்.

இன்றைக்கு பலர் யாரென்றே தெரியாத பெண்களின் தனிப்பட்ட விடயங்களை தேடிய லைந்து அதனை சர்வதேச அரசியல் பிரச்சனையை  அலசுவது போன்றும் பிரபலமான பெண்களின் முகநூல் பக்கங்களை வாசித்து அவர்களின் நாளாந்த பதிவுகளை வாசித்துக்கொண்டு அதனைப்பற்றி வம்பளப்பதனையும் வாடிக்கையாக்கிருக்கின்றனர்.இந்த விதத்தில் தான் வாணியைப்பற்றிய கதைகளையும் காற்றிலையவிட்டிருந்தனர்.ஆனால் அவளின் நாளாந்த நடவடிக்கையில் மயிரசைவேனும் தெரியாது தமது விருப்பத்திற்கு கதைப்பவர்கள் குறித்து எனக்கு  சிரிப்பு தான் வரும்.நம்மட சோனிக்காக்காமாருக்கு யாராவது பிரபலமான பெண்களை பற்றி ஊருபலாய் கழுவாட்டி தூக்கமே வராது.அப்படி பட்ட இரு எலக்கியவாதிகள் என்னிடம் அவள் பற்றி விசாரிக்கும் போது ஒங்கியறைந்திடத்தான் தோன்றியது .

இஸ்லாமிய வரலாற்றை பார்க்கும் போது ஒரு முறை உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் பற்றி கூடாத விடயங்களை கூறிய சஹாபியிடம் உமர் ரலி அவர்கள் கேட்டார்கள் "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறாயா?"
"இல்லை" என பதிலளித்தார் பின்னர்  "அவருடன் பிரயாணம் செய்து ஒன்றாக தங்கி ஒன்றாக சாப்பிட்டு நாட்களை கழித்திருக்கிறாயா?
" இல்லை"
"நீ அவருடைய அண்டை வீட்டுக்காரனா? "
"இல்லை"
"இப்படி எதுவும் இல்லை என்றால் நீ சொல்ற விடயம் பொய்.என்னிடம் அடி வாங்காமல் ஓடி விடு"என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.இத்தகைய அழகிய வழிகாட்டலை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் குறித்த சில ஆண்களின் கேள்விகள் அடிக்கடி என்னை ஆத்திரமூட்டவே செய்கின்றன.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட பண்புகள் விருப்பு வெறுப்புக்கள் என்று வேறுப்பட்ட இயல்புகள் இருக்கவே செய்கின்றன.அப்படி தான் வாணியும் அவளுக்கே உரித்தான பாணியில் பழகுவாள்.அது குழந்தை உமர் காலித்திடம் அதிக தாக்கம் செலுத்தியிருந்தது."வாணி பார்க்க போவமா?" என்று வினவுவான்.ஏதோ தியட்டரில் படம் பார்க்க போவமா என்று கேட்பது போல வாணி பார்க்க போவமா எனக்கேட்கும் போது அவனை அள்ளி அனைத்துக் கொஞ்சி "இல்ல போறல்ல"என்று சொன்னால் "போவமே அபி வா மாணி பாக்க போவம் "என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு வந்திடுவான்.அவள் சென்ற முறை வந்து போனது குழந்தைக்கு பெரிதும் தாக்கமில்லை ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் பழகி விட்டாள் போகும் போது என்ன நடக்குமோ என பயந்து கொண்டிருந்தேன்.நல்ல வேளை அவள் விமான நிலையம் செல்லும் போது உமர் காலித் உறங்கிவிட்டிருந்தான்.

எனக்கு பிரியாணி என்றால் அலாதிப்பிரியம் முன்பு வாணி செய்த பிரியாணி இப்ப சாப்பிடனும் போலவே இருந்தது.நான் உண்டாகி இருப்பது தெரிந்தால் எனை எதுவும் செய்ய விடமாட்டாள்."அங்க போகாத இங்க போகாத என்ன பார்க்க வராத உடம்ப பார்த்துக்க நேரத்துக்கு சாப்பிடு" என்று ஆயிரத்தெட்டு ஆச்சி டிப்ஸ் சொல்வாள் அதனால் சந்தர்ப்பம் வரும் போது சொல்லிக்கலாம் என்டு இருந்திட்டன்.ஆனாலும் வாய் பிரியாணியை ருசி பார்க்கவே ஆசைப்பட்டது.இந்திய பிரியாணிக்கும் இலங்கைக் கடைகளில் கிடைக்கும் பிரியாணிக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.கொழும்பிலுள்ள கடைகளில் கணவர் பிரியாணி வாங்கி வந்தால் இருவருக்கிடையில் முரண்பாடு தோன்றும்.காரமும் எண்ணெய்யும் அதிகமாக இருக்கும்.மஞ்ச கலரிலும் சிவப்பு கலரிலும் சாயம் உபயோகித்திருப்பார்கள்.
"ஊத்த கலரில் இருந்தா மாத்திரம் பிரியாணி வாங்குங்க" என்பேன் ஒரு முறை பம்பலப்பிட்டியில் சாப்பிட்ட நினைவு அதன் பிறகு அந்த டேஸ்டில் எங்கும் கிடைக்கல. நான் இந்தியாவின் எந்த பிரதேசத்திற்கு சென்றாலும் சாப்பிட நினைப்பது பிரியாணி தான்.கொழும்பிலுள்ள இந்தியன் ரெஸ்டொரன்ட்களில் சாப்பிட்டாலும் அந்த ருசி வருவது கிடையாது.அதன் அசல் டேஸ்டில் வாணி சென்ற முறை வந்த போது செய்த பிரியாணி அமைந்திருந்தது.இந்த நேரத்தில என்ன சாப்பிட பிடிக்குமோ அதனையே எல்லோரும் கொடுப்பர் ஆனா அதனை சொல்லாமலே அவளிடம் கேட்டேன்
"பிரியாணி செய்து தாறிங்களா?"
"அடுத்த முறை வரும் போது கட்டாயம் செய்து தாறேன்டா" என்றவளிடம் எதுவும் சொல்ல முடியாதவளானேன்.

முற்றும்-
12-05-2017