ஷாமிலா ஷெரிப் எழுதிய ''நிலவின் கீறல்கள் " கவிதைத்தொகுதி எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப.4.30 மணிக்கு கலாநிதி துரைமனோகரன் தலைமையில் இடம் பெறும்.நூலின் அறிமுகத்தினை எழுத்தாளர் ராணி சீதரன் நிகழ்த்துவதோடு நயவுரையினை சட்டத்தரணி மர்சூம் மௌலானா நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 30, 2012
Saturday, May 19, 2012
உன் முட்டக் கண்ணால் பார்
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து என்றான் பாரதி.ஆங்கிலேயனுக்கு பயப்பட்ட மக்கள் பரவாயில்லை எனலாம்.
ஆனால் ஒரு படைப்பாளி என்பவன் சமூகம் சாராதவன்.பலவருடங்களாக ஒரு சமூகத்தினை பேசியவன் இன்னொரு சமூகத்தின் பிரச்சினையை பேசுவதற்கு அத்தாட்சி பெறவோ அடையாளாட்டை பெறவோ தேவையில்லை.எத்தனையோ பேர் தன் சமூகத்தின் பிரச்சினையை பேசாமல் இருந்து விட்டுப் போகின்றனர்.ஒழுங்காக தமது சமூகத்தின் பிரச்சினையை பேசத்தெரியாத பயந்தான்கொள்ளிகள் இன்னொரு படைப்பாளியைபேசுவதா?இங்கே கிளிக் செய்க.http://www.youtube.com/results?search_query=musdeensim&oq=musdeensim&aq=f&aqi=&aql=&gs_l=youtube.12...9199.9755.0.14850.2.2.0.0.0.0.231.451.2-2.2.0...0.0.C83na8- ய்ந்ம்வ்
"புரூட்டஸ் நீயுமா?"
வெட்ட வெட்ட தான் காதல் தழைப்பதும் மரம் தழைப்பதும்.ஒரு விடயத்தை செய்கிறோம் செய்வோம் என வாக்களித்து விட்ட பின்னர் அவ்விடயத்தினை செய்ய முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இலக்கியவாதி சில நேரங்களில் அரசியல் வாதியாக நேரிடுகிறது.
" வீரன் ஒரு முறை தான் இறக்கிறான்.பயங்காளி நூறுமுறை சாகிறான்.என்று சொல்லி சீசர் சிரிப்பார். சீசரைக்கொல்வது புண்ணியம் என்று போதிக்கப்படுகிறது.புரூட்டஸ் ஒரு 'கோட்செயாக'மாறுகிறான். புரூட்டசின் கத்தி சீசரின் இதயத்தைப் பிளந்தது.சீசரின் ஆத்மா "புரூட்டஸ் நீயுமா?" என்று சொல்லிக்கொண்டு வானத்தைக்கிழித்தது
இங்கும் ஒரு இலக்கியவாதியும் அரசியல் வாதியும் ப்ரூட்டஸ் ஆக நேரிடுகிறது. கசியஸ் கூட்டத்தினர் ப்ரூட்டசை ஏமாற்றியது போல்
இங்கும் ஒரு கூட்டத்தினர் இலக்கியவாதியையும் அரசியல்வாதியையும் ஏமாற்றுகின்றனர்
அன்ரனி புரூட்டசைப்பற்றி நன்கறிவான்.புரூட்டஸ் ஏமாந்துதான் இதனைச் செய்தான் என்று அன்ரனிக்கு தெரியும் அன்ரனி தான் வாய்வீரத்தை புரூட்டசின் ஏமாற்றத்தை அவனுக்கே எடுத்துக்காட்டுவதில்செலவு செய்திருப்பானேயானால் எந்தக்கத்தி சீசரின் இதயத்தை பிளந்ததோ அந்தக்கத்தி கசியஸ் கூட்டத்தை சங்காரஞ் செய்திருக்கும்.அந்த வஞ்சகன் அன்டனி அப்படி செய்யவில்லை.
இங்கும் ஒரு அன்டனி ஏமாற்றியிருக்கிறான். "நீதி ஆபத்துக்குதவாது.லௌகீக தந்திரந்தான் ஆபத்சகாயன் என்றன் மேலைநாட்டுப் புலவன்.ஒரு படைப்பாளியின் ஆற்றலை எந்தக் காசியஸ் கூட்டத்தாலோ அன்டநியாலோ ஒன்றும் பண்ண முடியாது.தூரத்தில் இருந்து வேடிக்கை தான் பார்க்க முடியும் மதத்தின் பெயரால் ஊரை நாசமாக்கும் ஆசாமிகள் இலக்கிய வாதியின் ஒரு தலை முடியைஎனும் பிடுங்க முடியாது.
படைப்பாளி என்பவன் உள்ளத்திலிருந்து பேசுவான்.மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் வெளியிட்ட முஸ்டீன் உம் அதைத்தான்செய்திருக்கிறான்.
Friday, May 18, 2012
'மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்' கவிதை நூல் வெளியீடு
மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விநாயகமூர்த்தி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் அருகில் நூலாசிரியர் முஸ்டீன் நிற்பதையும் சட்டத்தரணி ராஜகுலேந்திராஅவர்களையும்சுமையாவையும்படத்தில் காணலாம்
அறிவிப்பாளர் ஷாமிலா ஷெரிப் அறிவிப்புச் செய்வதையும் சட்டத்தரணி காண்டீபன் அறிமுக உரை நிகழ்த்துவதையும்ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியர் தெ.மதுசூதனன் நூல் நயவுரை நிகழ்த்துவதையும் விழாவிற்கு தலைமைதாங்கிய
கொழும்பு தமிச் சங்கத்தின் துணைத் தலைவர் சட்டத்தரணி g .ராஜகுலேந்திரா தலைமையுர நிகழ்த்துவதையும் காணலாம்
விழாவில் பங்கேற்ற ஒரு பகுதியினர்
'மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்' கவிதை நூல் வெளியீடு
www.tamilmirror.lk
TamilMirror.lk – Sri Lanka 24 Hours Online Breaking News in Tamil Language: News, Politics, Video, Finance, Business, Sports, Horoscope .
Sunday, May 13, 2012
முகத்தாச்சினைக்கு குழந்தை பெறலாமா?
இலக்கிய உலகு இந்த அடிப்படையில் தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறது .பழகி விட்டோமே பரவயில்லை அவர் முகத்துக்காக எதாவது செய்ய வேண்டுமே என்பது தான் இன்றைய நியதியாகி விட்டது .அதற்காக எதாவது வழங்குவதும் கௌரவிப்பதும் விதியாகி விட்டது.கோபிப்பார்களே என்ன செய்யலாம்? என்பதற்காகவும் எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இலக்கிய உலகு எதாவது செய்யத்துணிந்து விட்டது எனலாம் .ஆனாலும் முகத்தாச்சினைக்கு குழந்தை பெறலாமா? என நண்பர்ஒருவர் கேட்டார் அப்போது தான் தெரிந்தது இப்படியும் குழந்தை பெறலாம் என்று.
Saturday, May 12, 2012
Sunday, May 6, 2012
Saturday, May 5, 2012
Thursday, May 3, 2012
Subscribe to:
Posts (Atom)