என் எழுத்துக்களை நீண்ட நாட்களாக காணவில்லை என பலரதும் மின்னஞ்சலை பார்த்து பரவசமடைந்தேன் .காரணம் கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் கடுமையாக வாட்டி எடுத்து விட்டது எனலாம் .என் எழுத்துக்களை வாசிக்க இத்தனை வாசகர்கள் உண்டா என அதிசயித்து விட்டேன் .எப்போதும் எதனையும் பெரிதாக நினைத்து பழகியதில்லை என்பதனால் நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்வாக இருந்திருக்கிறேன் என்பதை கூட வாசகர்கள் சொல்லியே அறிய முடிகிறது.மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .
Friday, February 3, 2012
Tuesday, January 10, 2012
நான் விரும்பும் நீ

"ஓர்-அத்தியாயத்தின்
சரித்திரப் புள்ளியாக
நான் ஏன்
இருக்கக் கூடாது ?"என
விளிக்கும்
உன் சினி வாசகம்
பார்த்து -(நான் )
விரும்பும்
நீயாக
ஏன் இருக்கக் கூடாது ?
என்கிறேன் .
எதற்கு இந்த
சமூக சேவை
என்பதை விட
ஏன்
இந்தத் தேவை
இல்லாத
வேலை எனத்
தோனுகிறது
தினமும் எனக்கு .
யாருக்குமில்லாத
தேசப்பற்று
உனக்கெதற்கு ?
அதற்கு
உனக்கு கிடைத்த
பெயரும் -நீ
அறியாததல்ல .
அதை -உன்
பற்று நீக்கிவிடுமா?
யார்
எப்படிப்போனால் தான்
உனக்கென்ன
வந்துவிடப்போகிறது ?
நீ
காட்டும் பற்றுக்கள்
உன்னை
வாழவைத்ததா???
யாரை
நம்பக்கூடாதென்று
மார்க்கம் பயின்ற
உன்னாலும்
நம்ப முடியாது
போனதேன் ?
உன்னிடம்
கேட்பதெல்லாம்
ஒன்றே ஓன்று
நான் விரும்பும்
நீயாக
ஏன் இருக்கக் கூடாது?
நாக்கு
எவ்வளவு
அழகான பெயர்
இதற்கு
அப்படி ஒன்றும்
பேசதெரியாது !
நரம்பில்லை
அதனால்
எப்படியும் பேசும் !
Saturday, January 7, 2012
மாறுதல்கள்

கடும் வரசியிட்குப் பின்
பெய்த மழை போல
உன் வரவு -அதனால்
என்னவோ
செழிப்படைந்தது உள்ளம்
மாரி காலத்து
அடை மழை போல
ஓயாத குறுந்தகவல்
தொலைபேசியில்
பார்த்து- தினம் தினம்
நெகிழ்வடைந்து நின்றேன்
வசந்த காலங்களை
மீட்டிப் பார்க்க வைத்தது
உன் நட்பு .
செய்தி கண்டு
நீண்ட நாட்களுக்குப் பின்
என் கவிதை
அலங்கரிக்கப்பட்டது .
மழையில் நனைந்து
குளிரில் நடுங்கி
உறவாடிய -அந்த நாட்கள்
கார்கால மேகங்களை
தொட்டுவிட்டுச் சென்றது .
இப்பொழுதெல்லாம்
ஏனோ
ஆங்காங்கே ...
தூறல்கள் மட்டும் .
நினைவின் விளிம்பில்
காதல் கவி -எழுதவில்லை
உனைக் காணும் வரை
கண்ணீர்க் கடலில்
மூல்கவுமில்லை
காதலிக்கும் வரை
சங்க காலம்
படிக்கையில் -புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ- எனைப்பிரிந்த போது
அன்பினைந்தினையும்
அறிந்து கொண்டேன் .
உன் -
திருமணச் சேதி
காதிலடிபட்டபோதும் -நான்
கணக்கெடுக்கவில்லை
அது தான்-உனக்கு
விதியென்று !
இன்று
காலம் பதில் சொன்னாலும்
காத்திருப்பேன் என
காதல் கடிதங்கள்
பறை சாற்றினாலும்
நீ -
இப்போது
நீயாக இல்லை
அதனால்
நானும் நானாக இல்லை
உனைக் காணும் வரை
கண்ணீர்க் கடலில்
மூல்கவுமில்லை
காதலிக்கும் வரை
சங்க காலம்
படிக்கையில் -புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ- எனைப்பிரிந்த போது
அன்பினைந்தினையும்
அறிந்து கொண்டேன் .
உன் -
திருமணச் சேதி
காதிலடிபட்டபோதும் -நான்
கணக்கெடுக்கவில்லை
அது தான்-உனக்கு
விதியென்று !
இன்று
காலம் பதில் சொன்னாலும்
காத்திருப்பேன் என
காதல் கடிதங்கள்
பறை சாற்றினாலும்
நீ -
இப்போது
நீயாக இல்லை
அதனால்
நானும் நானாக இல்லை
அவளுக்கொரு வேலை வேண்டும்
எல்லோரும்
வேலை பார்கிறார்கள்
அதனால் -அவளுக்கும்
ஒரு
வேலை வேண்டும்
விண்ணப்பித்தாள்
தகுதி இல்லாதவரும்
தகுதியிட்கு மீறிய
வேலை பார்க்கின்றனரே
என்ற வீராப்பில்
விண்ணப்பித்தாள்
பல -
'அப்பய்மன்ட்'கள்
வந்தன !
வேலைக்கல்ல-
அரசியல் வாதிகளை சந்திக்க !!!
வேலை பார்கிறார்கள்
அதனால் -அவளுக்கும்
ஒரு
வேலை வேண்டும்
விண்ணப்பித்தாள்
தகுதி இல்லாதவரும்
தகுதியிட்கு மீறிய
வேலை பார்க்கின்றனரே
என்ற வீராப்பில்
விண்ணப்பித்தாள்
பல -
'அப்பய்மன்ட்'கள்
வந்தன !
வேலைக்கல்ல-
அரசியல் வாதிகளை சந்திக்க !!!
புரிதல்கள்
உனக்கான ஏற்பாடுகள்
என் மனதில்
பலமாய் .......
என்னுடைய அசைவுகளில்
உன் -
புரிதல்களின் கீறல்கள்
விசாலமாய்....
எதனைச் செய்ய
முனைந்தாலும்
உன்னிடம்
அனுமதி பெற
துடிக்கிறேன்!-பல
தொடர்பாடல்
வலையமைப்புக்கள் -நம்
கைவசம் இருந்தும்
வேளைக்கு
தொடர்பு கொள்ள
முடியாமல் போகிறேன்
இது விதியா?
உன் -
மதியால் வெல்லமுடியாததா?
சதி என்றால் -எனக்கு
இது தான் கதியா?
இத்தனை கேள்விகளை
கேட்டு விட
உந்தித் தள்ளுகிறது
என் ஆன்மா!
உன் நிலைமை
அறிந்ததனால்
வெட்கித் தலைகுனிகிறது
என் பேனா .
என் மனதில்
பலமாய் .......
என்னுடைய அசைவுகளில்
உன் -
புரிதல்களின் கீறல்கள்
விசாலமாய்....
எதனைச் செய்ய
முனைந்தாலும்
உன்னிடம்
அனுமதி பெற
துடிக்கிறேன்!-பல
தொடர்பாடல்
வலையமைப்புக்கள் -நம்
கைவசம் இருந்தும்
வேளைக்கு
தொடர்பு கொள்ள
முடியாமல் போகிறேன்
இது விதியா?
உன் -
மதியால் வெல்லமுடியாததா?
சதி என்றால் -எனக்கு
இது தான் கதியா?
இத்தனை கேள்விகளை
கேட்டு விட
உந்தித் தள்ளுகிறது
என் ஆன்மா!
உன் நிலைமை
அறிந்ததனால்
வெட்கித் தலைகுனிகிறது
என் பேனா .
Subscribe to:
Posts (Atom)