Friday, July 20, 2012

மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து

மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டாலும்  பிரச்சினை என்னவென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.மக்களின் பிரச்சினையையை மக்கள் பிரதிநிதி தான் பேசவேண்டும்.அவ்வாறு பேசும் பொது பிரச்சினைக்கு காரணம் அமைச்சரே என கருத்து வெளியிடுவது உண்மைகுப்புரம்பானது.

Thursday, July 5, 2012

மனம் திறந்து .......

சில விடயங்களை  மனம் விட்டுப்பேசி விடலாம்.சில விடயங்களை பேசாமல் அதன் போக்கிலே விட்டு விடலாம்.சிலநேரங்களில் வாதாடலாம்.வாதாடி வெல்ல முடியாத விடயங்களை பேசாமல் இருப்பது தான் நன்று.கொஞ்சம் காலமாக எனது நண்பர் ஒருவர் என்னுடன் பேசுவதில்லை.அதற்கு குறிப்பிட்டு சொல்லுமாறு எந்தக்காரணமும் இல்லை.ஆனால் நாங்கள் பேசிக்கொள்வதில்லை.நான் ஒரு நூல் தான் வெளியிட்டேன்.அப்பாடா................................................................................... ஆயிரம் பிரச்சினை.அந்த நூலுக்கு விமர்சனம் எழுத யாரிடமாவது நான் சொல்ல வேண்டுமாம்.நேர்காணல் கொடுப்பதென்றால் அவர்கள் சொல்லுவதைப்பேச வேண்டுமாம்.என்னைப் பற்றி நானே மற்றவரிடம் சொல்லணுமாம்.ஏனெனில் பொறாமை நிறைந்த இலக்கிய உலகு அடுத்தவரின் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டாதாம்.இப்படிப் பல ...........................................
நான் ஒரு நூல் வெளியிட்டதால் அந்த நண்பருடன் பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் நூலை pitpottirukkalaam .ஆனால் தெரியவில்லை.

இங்கு அதிசயம் என்ன வென்றால் நண்பர் சொன்னதற்கு மாற்றமாக எல்லாம் நடந்தது.அனைத்து ஊடகங்களும் என் நூல் வெளியீட்டு விழா பற்றி செய்திகள் வெளியிட்டன.இது பற்றிய அவர்  கருத்தானது பெண் என்றால் அமெரிக்க ஜனாதிபதியும் செய்தி போடுவார் என்பது.பின்னர் விளையாட்டுக்காக போடப்பட்ட பின்னூட்டம் எங்கள் நட்பை இன்னும் விரிசலாக்கியது.இது வரை அந்த நண்பர் தொடர்பேட்படுத்த வில்லை.ஓன்று மட்டும் உண்மை சரி, பிழை தெரியப்படும் .அப்போது பிழை சரியாகவும் சரி பிழையாகவும் மாறிவிடாது............

நல்ல நட்பை விடுவது என்றால் கொஞ்சம் என்ன அதிகமாகவே கஷ்டம் தான்.அதற்காக கொள்கைகளை மாற்றிக்கொள்ளவோ புப்ளிசிட்டி பைத்தியமாக அலையவோ முடியாது.

ஷாமிலா ஷெரிப் 

Wednesday, June 6, 2012

புரிந்துணர்வு என்பது

மனது அமைதி பெற மறுக்கிறது.என்ன மனிதர்கள் இவர்கள்?புரிந்துணர்வு என்பது அவர்கள் அகராதியில் இருந்து அடியோடு அகற்றப்பட்டு விட்டதா? உண்மை என்னவென்று கேட்பதற்கும் அவகாசம் இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதன் அவசரத்திலோ வேலைப்பளு காரணமாகவோ எதை உள்வாங்கிக்கொள்கிறான் என்பதனைக்கூட புரியாதவர்கலாகிப்போய் விடுகிறார்கள் .எப்போதும் உண்மை இது தான் என்று வலிந்து நியாயப்படுத்த விருப்பமில்லை எனக்கு.யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சத்தியம் செய்து உண்மையை விளக்க எந்த தேவையுமில்லை .காலம் பதில் சொல்லட்டும்.

Wednesday, May 30, 2012

"நிலவின் கீறல்கள்" கவிதைத் தொகுதி வெளியீடு

ஷாமிலா ஷெரிப் எழுதிய ''நிலவின் கீறல்கள் " கவிதைத்தொகுதி எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப.4.30 மணிக்கு கலாநிதி துரைமனோகரன் தலைமையில் இடம் பெறும்.நூலின் அறிமுகத்தினை எழுத்தாளர் ராணி சீதரன் நிகழ்த்துவதோடு நயவுரையினை சட்டத்தரணி மர்சூம் மௌலானா நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Saturday, May 19, 2012

உன் முட்டக் கண்ணால் பார்

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து என்றான் பாரதி.ஆங்கிலேயனுக்கு பயப்பட்ட மக்கள் பரவாயில்லை எனலாம்.
ஆனால் ஒரு படைப்பாளி என்பவன் சமூகம் சாராதவன்.பலவருடங்களாக ஒரு சமூகத்தினை பேசியவன் இன்னொரு சமூகத்தின் பிரச்சினையை பேசுவதற்கு அத்தாட்சி பெறவோ அடையாளாட்டை பெறவோ தேவையில்லை.எத்தனையோ பேர் தன் சமூகத்தின் பிரச்சினையை பேசாமல் இருந்து விட்டுப் போகின்றனர்.ஒழுங்காக தமது சமூகத்தின் பிரச்சினையை பேசத்தெரியாத பயந்தான்கொள்ளிகள் இன்னொரு படைப்பாளியைபேசுவதா?இங்கே கிளிக் செய்க.http://www.youtube.com/results?search_query=musdeensim&oq=musdeensim&aq=f&aqi=&aql=&gs_l=youtube.12...9199.9755.0.14850.2.2.0.0.0.0.231.451.2-2.2.0...0.0.C83na8-ய்ந்ம்வ்