Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, March 21, 2017

விமர்சனங்களூடே...

அவளை விமர்சிப்பதாக
இவள் சொன்னாள்
அவர்கள்
இலக்கிய விமர்சகரல்ல
ஆய்வாளர்களல்ல
அயலவர்களுமல்ல
இவளைப்பற்றி அவனிடமும்
இவனைப்பற்றி அவளிடமும்
அந்த அறையிலிருந்த
வண்ணம் கதைப்பவர்கள்
கல்வி புகட்டுவதை
தொழிலாய்க்கொண்டவர்கள்

காலக்கொடுமை
அவர்களால் போதிக்கப்படும்
எதிர்கால கல்விச்சமூகம்
இம்மையில்
மனிதர்களால்
கேள்விக்குட்படுத்தப்படும்
மறுமையில்
இறைவனிடம் பதிலளிப்பார்கள்

இவள்
கற்களை கொத்திப்பிரட்டி
சமப்படுத்தியும்
முட்களை அகற்றியும்
பாதைகளை
செப்பனிடுகிறாள்
குழிகளை நிரப்ப அதிகநாட்கள் எடுக்கும்
ஆனாலும் அவள் பாதை அழகானது
நித்தியமானது
யாரும் தடுமாறியேனும் விழமாட்டார்கள்..
அதுவரை விமர்சனங்களூடே பயணித்துக்கொண்டிருப்பாள்

Sunday, March 19, 2017

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 07

வாசிக்கப்படாத கவிதையிடம்
வாசிக்கப்படாத புத்தகங்கள்
அதிகரித்து விட்டன
யார் யாரோ தந்து விட்டுப்போனதும்
தினித்துவிட்டுப்போனதும்
அடுக்கப்படவில்லை

அடுக்கியிருப்பதெல்லாம் வாசிக்கப்பட வேண்டியவை
புரிதலுக்கும்
விட்டுக்கொடுப்பிற்கும் இடையே
இந்தக் கவிதைப்புத்தகத்தை
செருகிவிட்டுச் சென்றார்கள்

அவன் வாசிக்க மறந்த நாவல்
மேசை மீது நீண்டநாட்கள்
விரித்துக்கிடக்கையில்
இடைச்செருகல் எவ்விதம் கண்ணில்படும்??
அவனுக்கு பிடித்ததெல்லாம்
அமானுஷ்யம் மட்டுமே

Saturday, March 11, 2017

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை-06


இருண்ட வானம்
கருக்கொண்ட மேகம்
வரண்ட மனிதம்
வழிநெடுகிலும்

உடைந்த குடை
நனைந்த உடை
குட்டைப்பாவாடை
அடை மழை
ஆமர்வீதியில்

இடிமின்னலில்
அவள் வயிற்றுப்பசி வெளிப்பட்டுத்தெறிக்கிறது
தினமும் பயணிக்கும் வீதியில்
முன்னொருபோதும் கண்டிராத
அந்தப்புதுமுகம்
என்னுள் பல கனைகளை தொடுத்திற்று..

பட்டினிக்கு
பெண்ணுடல் தான் தீர்வென நினைத்துவிட்டிருத்தாள்
குழந்தை விரல்களை நீட்டி
ஆன்ரி...என்கிறான்
மீண்டும்
அன்ரி பாவம் மா..
ஓம் மகன் அன்ரி பாவம்

Wednesday, June 1, 2016

வராத வெள்ளம்

கங்கை பெருக்கெடுக்க
பாய்ந்தோடி வந்த நீர்
உயர்வர்க்கத்தினர் வாழும்
தெருக்கள் கண்டும்
அவர்களின் வீடுகள் கண்டும்
பின் வாங்கியோடி
ஏழைகளையும்
மத்தியவர்க்கத்தையும்
தேடிச் சென்று வெள்ளக்காடாக்கிற்று.

வடிந்திட்ட வெள்ளம்
சேறாய் மாறி அந்தத் தெருவை
விட்டகன்று பயத்தில்
சேரிப்புறச்சுவருக்குள் ஒழிந்து கொண்டனவே
சேறுக்கும் நீருக்கும்
பிரித்தறியத்தெரிந்த வர்க்க பேதம்
வயிற்றுப்பசிக்கு மட்டும்
தெரியாமல் போனதுவோ

மண் மீசையில்
ஒட்டவில்லை என்பதனை
வானுயரப்பறந்த விமானம்
படம் எடுத்துக்காட்டிட
ஊடகங்களும் வெளியிட்டன...

Sunday, October 25, 2015

முகாந்திரம்



நீ கட்டமைத்திருக்கும் 
என் வாழ்வு 
கட்டிப் போட்டிருக்கும் 
என் செயற்பாடுகள் 
உறையவைக்கப்பட்ட 
என் திட்டங்கள் 
சுருக்கிடப்பட்ட 
என் ஆசைகள் 
சொல்லி மாளாத 
வலிகள் அத்தனையும் 
என் பெயர் கொண்ட 
இரகசிய குறியீட்டால் 
கட்டியாளப்படுகின்றன 

கல்சிய பாறைகளாய் 
என் ஆற்றல்கள் 
படிந்து  போயின. 
அவ்வப்போது 
என் ஆளுமைகளை 
கொப்பி கட் பேஸ்ட் 
என்றெல்லாம்  முடக்கி விடுகிறாய்.

என் உணர்வுகளை
உடைத்து விட்டு 
நதியாய் நீ புறப்படுகிறாய்  

என் கால்கள் 
உயிர்த்து விட்டன இப்போது
நகர்ந்து கொண்டிருக்கிறேன் 
விரைவில்  நடக்க இருக்கிறேன்.
நீ சொன்ன வட்டத்திற்குள் மட்டும்! 


Saturday, March 16, 2013

அடக்கி விட முயலும் அதிகாரம்


அமைதியாக நான் இருந்ததில்
பொதிந்திருந்த அர்த்தம்
உனக்குப் புரிந்திருக்க நியாயமில்லை

தட்டிக் கேட்பததைத்  தட்டி விட்டு  
பலர் வாய்களை 
கட்டிப்  போட்டு 
அராஜகங்களை புன்னகைக்குள் 
அடக்கி விட முயலலும்
அதிகாரம் 
நிலைத்துருக்காது.


கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத
உனதாட்சி வேண்டுமெனில் 
காகிதப் பொம்மைகளுக்குப் பிடிக்கலாம்

முறைத்துப் பார்த்து அடக்கி விடவும் 
சொடுக்குப்போட்டு மிரட்டிப் பார்க்கவும் 
சத்தமிட்டே வாயடைத்து வைக்கவும் 
உனக்கிருக்கும் ஆசைகளை அனுசரித்துப் போகவும் 
சகித்துக் கொள்ளவும் 
நானொன்றும் உன் மனைவி அல்லவே.  

நீ நீட்டும் விரலுக்கு 
சுளுக்குப் பிடிக்கவும் 
உடைத்து விடவும் 
நறுக்கி விடவும்
எனக்குத் தெரியும் 

வெண்டிக்காய் முத்தல் என்று 
தெரிந்தும் வீசி விட 
மனம் இடம் கொடுக்காது 
சமைப்பவள் அல்ல நான் .

அநியாயம் எவ்வடிவில் வரினும் தட்டிக் கேட்பேன் 
ஆயுள் கைதியாய் வாய்களைப் பொத்தி 
சிறை வாசம் அனுபவிக்க
நான் தயாரில்லை.

காலநிலை மாறுவது போல் 
பதில் கடமையும் மாறும் 
நான் எங்கு சென்றிடினும் 
நான் நானாகவே இருப்பேன்.



நீ என்ன கொம்பனா?



நீ
முன்பு கொத்தியதெல்லாம்
தேக்கு, பலா
வீரை, முதிரை
நான் வாழை
நீ மரங்கொத்தி!
மறந்துவிடாதே.

ஆப்பிழுத்த குரங்கு போல
நீ படும் பாடு கண்டு
இங்குள்ள காட்டு மிருகங்கள்
வேதனைப்படுகின்றன.
அவைகளுக்கும் சேரத்து
சொல்லி வைக்கிறேன்
உன் மிருக்ககாட்சி சாலைக்குள்
பறவைகள்
கூடுகட்டி வசிக்கின்றன
தண்ணீர்வற்றியதும்
பறந்துவிடுமெனச்
சிங்கம் சொன்னதால்
விட்டுவிடுகிறேன்.

நீ சுண்டெலி
நெல்லை நறும்பவும்
புனைக்கு தாப்புக்காட்டவுமே
உன்னால் முடியும்
உன்முகத்தைப் பார்த்து
புனைக்குட்டிகள் ஒதுங்கிக் கொள்கின்றன
சாப்பிட மனமின்றி
பயந்துவிடுவதாய் அர்த்தம் கற்பிக்காதே.

நீ நரி
காட்டிற்குவரும் காகத்தையெல்லாம்
கூட்டாளிபிடிக்கிறாய்
வேட்டைநாய் குரல் கேட்டால்
ஓடும் திசைஉனக்கே தெரியாது,

நீ குப்பைக்காகிதம்
காற்றுக்குமேலெழுந்து
கதிரையில் கிடந்தாலும்
சங்கமிப்பது
மீண்டும் தெருக்குப்பையோடே.

Sunday, February 26, 2012

வேட்கை


பனித்துளி போல் ஒரு வாழ்கை
அதில் -ஆயிரம் ஆயிரம் ஆசை
வெற்றியில் திளைத்திட வேட்கை
வளமாய் வாழ்ந்திட பேராசை
கண்ணீர் கண்டால் பெரும் சோகம்
துன்பம் வந்தால் பெரும் துக்கம்
இன்பம் மட்டுமே வேண்டி ஏக்கம்
மரணம் இன்றேல் என்று தாகம்

இழப்புகள் இன்றி வெற்றி கிட்டுமா?
துன்பம் இன்றி இன்பம் கிட்டுமா ?
அன்பு கொன்று வாழ்கை வெல்லுமா?
பாச வேஷம் களைந்து சொல்லடா
எதையும் தாண்ட துணிந்து நில்லடா
பகையும் தோற்று பணிந்து செல்லுமே

உனது வாழ்கை உந்தன் கையில்
எளிய உழைப்பு வழிய கையில்
துவண்டு போனால் தோல்வி உன்னில்
துணிந்து சென்றால் உலகம் பையில் . 

Saturday, February 18, 2012

உனக்கு நிகர் நீ...!



உனைப்பற்றி
எழுத நினைத்த போது
ஒரு கணம்
தமிழ் மறந்து போய் விட்டது
எனக்கு .

சிங்கத்தின் அவையில்
சிற்றெறும்பு
கவி பாடுமா?

இருந்தும்
வானத்து மழையா ?
இல்லை
மடை திறந்த வெள்ளமா?
சிந்தித்து சிந்தித்து
'நயாகரா' என
ஆறுதல் கொள்கிறது
என் மனது

உனை
இலக்கியச் சிறைப்பிடிக்க
நினைத்து
ஆயுள் கைதியானேன்
நான் !

இலக்கணம் எதுவுமின்றி
தலைக்கணத்துடன்
சந்தமின்றி
நேற்றுப்  பெய்த
 மழைக்கு-தளிர் விடும்
காளான்களுக்கு
மத்தியில்
உனக்கு நிகர்
நீயே தான் .

கலை நீரை
உள்வாங்கிய
கருமேகமாய்
கவி மழை பொழியும்
உனக்கு -கொடுக்க
எதுவுமில்லை
என்னிடம்
அதனால்
வடித்திருக்கிறேன் .

வார்த்தைகள்
தடுமாறுகின்றன -என்
கவி வாசல் மூடப்பட்டு
திறந்திருப்பது
உன் ஆற்றல் மட்டும் தான்
நுழைவதற்கு
நான் தகுதியானவள்
அல்ல .
தோற்று திரும்பி போகிறேன் .













Saturday, February 11, 2012

புரட்டாத பக்கங்கள்



உன் வாழ்க்கைச்
சரித்திரத்தின் 
அந்தப் பக்கங்களை 
புரட்டிப்பார்க்கிறேன் 

பள்ளிக்காலம் 
பாடம் கற்றுத்தரவில்லை 
பருவ வயது 
பக்குவப்படுத்தவில்லை 
இணைப்பாடவிதானம் 
ஈடுகொடுக்கவில்லை 
உறவுகள்
ஊ க்கப்படுத்தவில்லை 
உணர்வுகள் 
உறுதிப்படுத்தவில்லை 
நீ நீயாக இல்லை .

தோழனே ,
எடிசனுக்கு ஊகக்கம் 
தந்தவர் யார் ?
ஆப்ரகாம் லிங்கன் 
எப்படி ஜனதிபதியானான் ?
சோக்ரடீசுக்கு
தத்துவம் 
பயிற்றுவித்தவர் யார்?
இவை உனக்குள் நீ 
தொடுக்கவேண்டிய 
வினாக்கள்.

நண்பனே 
நட்புக்கள் -உன் மீது 
நாட்டியம் பயின்றாலும் 
நடை பயில வேண்டியது 
நீ தான் .

உன் உதவும் கரங்கள் தான்
உனக்கு முதுகெலும்பு 
உறுதியோடு போராடு 
விளக்கில் விழுந்து சாக -நீ 
விட்டில் பூச்சியல்ல .
பாரெங்கும் பறந்து திரியும் 
பட்டாம் பூச்சி என்பதை 
புரிவாய் . 

Monday, October 24, 2011

மௌனியாய் பயணிக்கிறேன்








இது வரை 
என் வாய்க்கு 
இப்படி ஒரு 
தாழ்ப்பாள் இட்டதில்லை நான் 
உன் பிரிவு 
எனை -
முழுமையாய் கட்டியாள்கிறது
எதை விடுவது 
எதை தொடுவது 
இல்லை -எதை 
விட்டு ஒதுங்குவது 
எதனையும்  கற்றுத்தரவில்லை நீ 
அதனால் நான் 
மௌனியாய் பயணிக்கிறேன் .......................
இப்போது எனக்குத் 
தெரிந்தது எல்லாம் 
தனித்திருந்து உன்னை நினைப்பது தான் 

Wednesday, September 28, 2011

யார் எழுத்தாளன் ?




கையில் பேனை 
எடுத்தவரெல்லாம்  எழுத்தாளனா?
இல்லை -
கண்டதையெல்லாம் -எழுதித் 
தள்ளுபவன் எழுத்தாளனா ?

அலுவலகத்தில்
இலிகிதர் வேலை பார்ப்பவன்
எழுத்தாளனா?
அல்லது 
ஆவலில் இலக்கியம் படைக்க 
எழுதுபவன் எழுத்தாளனா?

சாதனை படைக்க
வேண்டும் என்று எழுதுபவன் 
எழுத்தாளனா?
சோதனையில்-
வேதனையை வெளிப்படுத்த
எழுதுபவன் எழுத்தாளனா? 

தன்னை 
அறிமுகபடுத்த எழுதுபவன்
எழுத்தாளனா?
எழுதியதனால்
முகவரியையே தொலைத்தவன்
எழுத்தாளனா ?

எழுதி எழுதி
தனக்கென இடத்தை
பிடித்தவன் எழுத்தாளனா?
பார்த்து பார்த்து
எழுதி -
பரிசு பெற்றவன் எழுத்தாளனா?

எழுதியதற்கு
அடையாளமாய் நூலொன்றை
உருப்பெறவைத்தவன் எழுத்தாளனா?
அந்நூலினை
விற்பதட்காய் அலைந்தவன்
எழுத்தாளனா ?

எழுத்தாளனுக்காய்
இரங்கற்பா எழுத
யாருமில்லை
 நீயும்
எழுதிப்பார் புரியும்
யார் எழுத்தாளனென்று !


குறிப்பு :இலங்கையில் எழுதாட்டியும் சாகித்திய பரிசு கிடைக்கும்

Tuesday, September 27, 2011

உன் நினைவும் என் தரிசனமும்




என்னில் நிறைந்துவிட்ட 
உன் -நினைவுகளை 
காற்றில் கலந்துவிட்ட 
வாசமாய் 
என் உள்ளம்
சுவாசித்துக்கொண்டிருக்கும் 

உன் சர்வாதிகார 
முறைப்புக்கூட
சோஷலிச புன்னகையை 
நினைவூட்டிக்கொண்டிருக்கும்

உன் வருடல்கள் 
வாழ்வின் 
இறுதிக்கிரியைகளாய்
உலா வந்து கொண்டிருக்கும் 

உன்னால் உண்டான 
காயங்கள் 
ஹிரோஷிமாவை தாக்கிய 
அணுகுண்டாய்
என் இதயத்தில் 
என்றும் வலித்துக்கொண்டிருக்கும் 

சாம்பலாகிப்போன 
உன் நினைவுகளில் 
என் தரிசனம் 
எரித்தாலும் 
மீளெழும் பீனிக்ஸ் பறவையாய்
சிறகடித்துக்கொண்டிருக்கும்  

Monday, September 26, 2011

காட்டான் எனும் நாட்டான்




நகரத்துச் சிலருக்கு 
நாகரிகமாய் உரைக்கவும்
நக்கலாய் அழைக்கவும் 
ஒருவன் -அவன்
காட்டான் எனும் நாட்டான் 


விஞ்ஞானம் படித்து -நகருக்கு  
மெய்ஞ்ஞானம் போதிக்க வந்தவன்
நாட்டான்
வருத்தமெனின் தன் கருமத்தையும் பாராது 
மருத்துவம் பார்ப்பவன் 
நாட்டான்

கட்டிடம் குட்டிச் சுவராகமுன்
அதனை மட்டிட்டவன் 
நாட்டான் 
பட்டணத்தில் பெட்டிக்கடை வைத்து 
காசை கொட்டிக் கொண்டவர்களை
தட்டிக் கேட்காதவன்
நாட்டான்

பாடம் புகட்ட வந்து
பாடம் கற்றுக்கொண்டவன்
நாட்டான்
ஏற்ற இரக்கமின்றி
மாற்றங்களை ஏற்றுக்கொண்டவன் 
நாட்டான் 


வோட்டுக்களை வென்று 
நாட்டுக்கு சேவை செய்பவன் 
நாட்டான்
பாட்டுக்களை கேட்டாலும் 
நாட்டு நடப்புக்களை 
அறிந்தவன் நாட்டான்

கல்விமான்களை கவரிமான்களை 
நினைப்பவன்
நாட்டான்
கல்வியல் கரைகானத்துடிக்கும்
நீச்சல்காரனும்
நாட்டான்

இத்தனைக்குள்ளும்
கிராமத்தில் படித்தவனை
நகரத்துச் சில முட்டாள்கள்
அழைக்கும் வார்த்தையும்
நாட்டான்!!
இவற்றையெல்லாம் அறிந்திராதவனும்

காட்டான் எனும் நாட்டான்

தொட முடியா தொலைவில்



பருந்து போல 
உயருது பால்மா
விருந்து கொடுக்கமுடியா
விலையில் அரிசிமா

அருமருந்தாய்ப் போனது 
மண்ணெண்ணெய் 
வருவலையும்
அவியலாக்கியது தேங்காயெண்ணை 

கறிக்கு புளிமாங்காய் போல் 
தேங்காய் 
சதா சாப்பாட்டில் 
கத்தரிக்காய் 

பொறுக்க முடியவில்லை 
இந்த வாழ்க்கைச் செலவு 
தாக்குப்பிடிக்கவில்லை 
தகுமான வரவு 

தோசைக்கு இனி  இல்லை
சட்னி 
ஏழைகளுக்கு உண்டு 
வாழ்வில் பட்டினி

தேடல்




வசந்த கால 
மேகங்களில் பார்க்கிறேன்
கடந்த கால 
சோகங்களை 
கூடவே  
வேதனையுடன் மீட்டிப்பர்கிறேன் 
வடுக்களை .......
கார்கால தூறல்களின் 
துருக்கள் அதில் படிந்திருக்கின்றன

ஊடகம்


காயல் பட்டின இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மகளிர் அரங்கில் வாசிக்கப்பட்டது .



இனி வரும் நூற்றாண்டுகள் 
இதன் ஆளுகையில் தான்
ஊடகம்
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் 
குத்திக்கூறு போட
மேற்குலகு
பயன்படுத்தும் பேராயுதம்


நாமெல்லாம் கவனிக்காது
தூக்கிப்போட்ட்         
தாக்குதல் கருவி 
மகிமை புரியாது 
புறந்தள்ளிய கூராயுதம் 
ஊடகம்
இதை 
கையாளத் தெரிந்தவன்  
உலக நாயகன் 
அனைத்தையும் தீர்மானிக்கும் 
அதி உயர் சக்தி.
  
நேற்றைகளைப் புரட்டிப்பார்க்கிறேன் 
உலகத்தூதர் பயன்படுத்திய 
அதி உச்சத்தை கான்கிறேன்
மக்களெல்லாம் ஓன்று திரட்டி 
மலைக்குன்றின் மீது நின்று
நான் இறைவனின் தூதன் 
அல்லாஹ் மட்டுமே இறைவன் 
என்று உரத்து முழங்கிட
அன்று அதி உச்ச ஊடகம்
அரபா மலைக்குன்று 
என் சமூகமே
தூதர் காட்டிய
அழகிய வழிமுறைகளை 
தூரத்தே எறிந்து விட்டு
எப்படி நிம்மதியாக 
தூங்க முடிகிறது?

உன் எதிரிகள் கீலங்கீலமாய்
கிழித்தெறிய கண்ணுற்றும்
எத்தனை நாளைக்குத் 
தொடரும்
இந்த மௌனம்.........?
உனக்கென்றொரு
தினசரிப் பத்திரிகை கிடையாது
வானொலி அலைவரிசை கிடையாது
உனக்கென்றொரு
தொலைக்காட்சி அலைவரிசை கூடக்
கிடையாது...
எப்படி -நீ 
நாளைகளை வெல்லப்போகிறாய்...?


வெறும் உணர்வுகளில் முக்குளித்து
வாய் கிழியக் கத்தினால்
உன் பிரச்சினைகள்
தீரும் என்று
எப்படித் துணிய முடியும் ?

உன் எதிரி
குண்டு வைப்பான்
வெடிக்கச் செய்வான்
பல நூறு உயிர் கொல்வான்

இங்கு -
ஊடகங்களின் வாயில் தீனி 
முஸ்லிம் தீவிரவாதி 
இஸ்லாமியப் பயங்கரவாதி 
எங்கும் தலைப்புச் செய்தி 
'முஸ்லிம் தீவிரவாதிகள் 
குண்டு வைப்பு 
நூறு பேர் கைது "


வெட்கமில்லை உனக்கு 
பிரியாணியில் கைவைக்க 

இன்று வரை சிறையில் வாழும் 
தீவிரவாதியை 
முத்திரை குத்தப்பட்ட 
அப்பாவிகளுக்காக 
என்ன குரல் கொடுத்துவிட்டாய் ?

நாளை முஸ்லிம் உயர்ந்து நிற்பான்
நாளை இஸ்லாம் -
உலகை வெல்லும் -நாளை
நாமெல்லாம் ஆட்சியாளர்கள்
எத்தனை நாளைக்கு
நாளை மீது பாரம் சுமத்தி
கற்பனையில் சரித்திரம் படைப்பது ?


உனக்கென்ன பழமிருக்கிறது இங்கு?
பாபர் மஸ்ஜித்
இடிக்கப்பட்டபோது
கோவையில் அப்பாவிகள்
கைது செய்யப்பட்டபோது
குஜராத்தில் முஸ்லிம்கள்
எரித்துக் கொல்லப்பட்டபோது
உன் -உரிமைகள் 
பறிக்கப்பட்டபோது 
உனக்காக குரல் கொடுக்க 
உனக்கென்றொரு
தனித்துவ 'ஊடகம் '
இல்லாமல் போனது 
உன் ரோசத்திக்கிலரவில்லையா? 
உலக அரங்கில்
உனக்கென்ன பலமிருக்கிறது?
முதல் கிப்லா
முற்றுகை இடப்பட்டபோது
செச்சினியா ,டாகேஸ்தான்
துவம்சம் செயியாப்பட்டபோது
பொஸ்னியா
;நிர்மூலமாக்கப்பட்டபோது 
ஆப்கான் ஈராக் தாய்லாந்து சீனா
என்று 
இன்று வரைத் தொடரும் 
அவலங்களுக்கு ................

உன்
எதிரி தருவதுதான் விளக்கம்
உன்
எதிரி சொல்வதுதான் செய்தி
உன்னைத்தீர்மானிப்பது
எதிரிகளின் ஊடகம்

உன்
குரல் வலை நசுக்கி
சப்தத்தை பறித்து
எதிரி உன்னை கட்டமைக்கிறான் 


என் அருமைச் சமூகமே
இப்போது சொல் ...
உனக்கான தனித்துவ
ஊடகத்தை -எப்போது
நிறுவப்போகிறாய்?

-ஷாமிலா ஷெரிப் -
இலங்கை .

குறிப்பு -மகளிர் அரங்கில் போலி பெண் நிருபர் படம் பிடித்ததால் என் படம் இங்கு இடம் பெறவில்லை


சொல்லாமலே............



எனக்குள் தேங்கிக் கிடக்கும்
ஏக்கப் பெருமூச்சுக்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்க
பல தடவை நினைக்கிறது.......
அணை போட்டு
தோற்றுப்போகிறேன்

எதையும் ஆராயாது
எப்படியும் பேசும்
பண்டிதர்கள்...... 
எதுவுமே புரியாது
மாற்றாரின் கதைகளையே நம்பும்
பாமரர்கள்......
தெருவில் பேச்சுக்குப்பை பொறுக்கும்
வேலையில்லாக் கூலிகள்
இவர்களுடன் சேர்ந்து
மொட்டத்தலைக்கும்
முடங்காலுக்கும்
முடிச்சுப்போடும்  
உறவினர்களில் சிலர் 
இவர்களை அறியக்கிடைத்தமை 
என்-
இலக்கியப்பரவளுக்கு கிடைத்த 
மிகப்பெரிய வெற்றி  


யுத்தத்திற்குப் பின் 
எழுதுவதற்கு 
கரு இல்லாமல் தவித்த 
நான் 
இன்று இலக்கியத்திற்கு 
முற்றுப்புள்ளி
 வைக்கமுடியாமல் 
தவிக்கிறேன் .

உடன் போக்கு





காலம் எனும் 
தாளிளொரு 
கவி எழுத நினைகின்றேன் 
இங்கு 
எதிர் காலம் 
உண்டென்பதே சந்தேகம் 
அவ்வாறிருக்க இன்னொரு
ஜென்மம் 
எப்படி வரும் ?
மறக்க நினைத்தாள் 
நீங்காத 
நினைவுச்சின்னம் நீ 
அன்பினால் 
அரவனைக்கப்பட்ட நம்மை 
ஆசையினால்
பிரித்துவிட முடியாது 
உன்னை 
விடிவெள்ளியாய் 
காணும் வரை 
காத்திருக்க முடியாது 
இனி நானும் 
வந்து விடுகிறேன் 
விண் மீனாக 
உன்னுடன்