Thursday, March 22, 2012

தனித்திருந்து காத்திருத்தல்



இது ஒன்றும் 
எனக்கு புதிதல்ல 
அதில் -
எத்தனை சுகம் 
என்பதுவும் 
நான் அறியாததல்ல 

என்னில் -நீ 
காண்பது 
வலிகளல்ல...
உன்னை காணாத 
வழிகளில்- என் 
விழிகளல்ல 

நித்தமும் 
காலடிச் சத்தம் 
கேட்பெதென்ன?
திரும்பும் 
போதெல்லாம் 
நிசப்தமென்ன ?

தனித்திருத்தல் 
பற்றி நீயும் 
காத்திருத்தல் 
பற்றி நானும் 
ஆய்வு செய்வோம் 

எங்காவது 
எனது  கேள்விகளுக்கு 
உனது ஆய்வில் 
விடை கிடைக்கும் 




Thursday, March 15, 2012

முன்னுரை

நான் கவிதை எழுதுகிறேன் என்பதை விட என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் என்பது தான் உண்மை .என் கவிகளுக்கு காலச் சூழலும் மனித நடவடிக்கைகளுமே களம் அமைத்தவை. இந்த வலைப்பூவில் என் முகவரி
தொலைக்கப்படும் என்பதற்காக எழுதியும் எழுதப்படாத கவிதைகள் இடம் பெறவில்லை. அவ்வப்போது எழுத நினைத்தாலும் ஏதோ ஒன்று ஆட்கொள்வதனால் என் உள்ளம் அமைதி பெறும்.
மனதில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தத் சிறந்த ஊடகம் தான் இலக்கியம்.
அதன் வடிவமான கவிதை படிப்பதற்கும் எழுதுவதற்கும் இதமானது. எல்லோராலும் எல்லா விடயங்களையும் புரிந்து கொள்ளல் முடியாது. சிலவற்றை சொல்லலாம் சிலவற்றை சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆக  வேண்டும் என்று இருந்தால் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும்.

Monday, March 12, 2012

புரியாமலே...

நம் கவிதை
எழுதப்படுகிறது
உன்னால்
புரிந்து கொள்ளப்படும்
என்ற நம்பிக்கை அல்ல
புரியா விட்டாலும்
எழுதப்பட வேண்டியது
காட்டாயம் என்பதால்

உனக்கான என்னை
என்றும்
எப்போதும்
தயார் படுத்துவது
உண்மை ......
ஆனாலும்
காலம்
விட்டு வைக்குமா
தெரியவில்லை?

என்னால்
புரியப்பட்ட நீ
என்னை புரிந்து 
கொள்ளாமல்
போவதன் மாயை
மட்டும்
இன்னும் புரியவில்லை .

Saturday, March 3, 2012

தொலைவில் ........




என்னை எனக்கே 
உணர்த்திய தலைவன் 
நீ .......
உன்னால் தான் 
காதலிக்க 
கற்றுக்கொண்டேன் .....
கூடவே 
நடக்க முடியாததை 
கனவு காணவும் ...
 
காலம் பதில் 
சொல்லட்டும் 
என்றா 
தொலை தூரம் 
சென்று விட்டாய் ?

உன்னாலே 
எல்லாம் 
உண்டானவை 
என்பதை மட்டும் 
மறந்து போனதென்ன ?

எது எப்படினாலும் 
என்னை எனக்கே 
புரிய வைத்தாய் 

உனக்காக 
வாழ்வது 
இஷ்டம் என்றாலும் 
அவ்வளவு கஷ்டமில்லை 
அதுவரை 
நான் உன் காதலி .

Wednesday, February 29, 2012

விடியல்



அனைத்துமே
இருளாகத்தான் இருக்கின்றன
கூடவே
மனித மனங்களும் 



தொலைத்துவிட்ட
சந்தோசங்களை
ஒரே விடியலில்
பார்க்கிறேன்.........

கண்டவை
கனவு என்று
விடியும் வரை
தெரியாது ...

விடியலின்
மகிழ்ச்சியில்
சிந்திக்கிறேன் ...
முடியும் வரை
தெரியாது 
வாழ்வது எப்படி என்று ?

முடிவில்
ஓர் ஆரம்பம் ....
பல தனி மரங்கள் தான்
தோப்பானது....

இந்த தொடர்ச்சி-அழகிய 
விடியலை நோக்கி ....


Sunday, February 26, 2012

வேட்கை


பனித்துளி போல் ஒரு வாழ்கை
அதில் -ஆயிரம் ஆயிரம் ஆசை
வெற்றியில் திளைத்திட வேட்கை
வளமாய் வாழ்ந்திட பேராசை
கண்ணீர் கண்டால் பெரும் சோகம்
துன்பம் வந்தால் பெரும் துக்கம்
இன்பம் மட்டுமே வேண்டி ஏக்கம்
மரணம் இன்றேல் என்று தாகம்

இழப்புகள் இன்றி வெற்றி கிட்டுமா?
துன்பம் இன்றி இன்பம் கிட்டுமா ?
அன்பு கொன்று வாழ்கை வெல்லுமா?
பாச வேஷம் களைந்து சொல்லடா
எதையும் தாண்ட துணிந்து நில்லடா
பகையும் தோற்று பணிந்து செல்லுமே

உனது வாழ்கை உந்தன் கையில்
எளிய உழைப்பு வழிய கையில்
துவண்டு போனால் தோல்வி உன்னில்
துணிந்து சென்றால் உலகம் பையில் . 

Saturday, February 25, 2012

உறவு

 எனை பொறுத்த வரை உறவு என்பது விடையில்லா வினா.மூன்று பேருக்கு சுவனம் கிடைக்காது அதில் ஒருவர் உறவுகளை வெறுப்பவர் .நிச்சயம் அப்படிப்பட்டவருக்கு சுவனம் கிடைக்கக் கூடாது தான்.பிரச்சினை நடக்கிற பொழுது வீதியில் நின்று வம்பளக்கும் உறவும் மிகுதியாக்கிப் பேசும் உறவும் நான் அறியாததல்ல .தேவைக்கு மாத்திரம் பேசும் உறவும் உண்மை அறியாது உறவு வேண்டாம் எனும் உறவும் இந்த சமூகத்தில் இடம் பிடிக்காததல்ல. இத்தனை நடந்த பிறகு என்ன உறவு ?எனும் உறவு தேவை தானா?உறவுக்கு விளக்கம் என்ன?உனக்கு தெரியாதது அல்ல .