Wednesday, November 30, 2011

முஸ்லிம் பெண்களும் காதிநீதி மன்றங்களும்

முஸ்லிம் பெண்கள் உலகில் எவ்வளவோ முன்னேறி இருந்த போதிலும் இலங்கையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது .மன வாழ்வு கசந்து போய் இனி வாழ முடியாது என்று கருதுகிற பட்சத்திலே காதி நீதி மன்றம் நோக்கி செல்கிறாள் .இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையில் காதி என்பவர் யார் ?அவருக்குரிய அலுவலகம் எது ?காதிக்குரிய தகைமைகள் என்ன ?காதி எவ்வாறான கேள்விகளை கேட்க வேண்டும் ?என்ற விடயம் எல்லாம் எழுதப்படாத சட்டமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் .

ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பதன் நோக்கம் அவர் ஓய்வாக இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் இங்கு ஓய்வு பெற்றவரே சில சமயங்களில் காதி நீதவானாக இருக்கின்றார் .இல்லாவிடில் ஊரில் பெரியவரோ மார்க்க பெரியார் ஒருவரோ நியமிக்கப்பட்டுள்ளார் .இரண்டு உள்ளங்களுக்கிடையில் தீர்ப்பை வழங்குபவருக்கு இருக்க வேண்டிய தகைமை என்ன என்பது பற்றி எங்கும் குறிப்பிடவில்லை .

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான  கலந்துரையாடல் ஒன்று சென்ற வாரம் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது .   

Sunday, November 20, 2011

நண்பனுக்கு

துளியளவும் ரசனை
இல்லாத உனக்கு
என் கவிதைகள்
உனது மொழியில்
செல்லாக்காசு ........

நண்பா
இலக்கியம் படைப்பதில்
உள்ள ஆத்ம
திருப்தி -ஓயாது
உழைக்கும் உன்னிடம்
இருக்காது....

ஒரு கவிதை
எழுதிப் பாரேன்
உனக்குள்ளும் ஏதாவது
பிறக்கும்...
அது எதுவாக இருப்பினும் ........


Friday, November 18, 2011

லண்டன் மாப்பிள்ளை


போ(f)ரின் போக முன்
பேசிவைத்த
பாரீதா ராத்தாட மகள்
பாத்தும்மாவை மறந்துவிட்டது
தம்பிக்கு .

இங்கிருந்து -
இங்கிலாந்து சென்றபின்
நினைவில் வந்ததெல்லாம்
வேர்ல்ஸ் இளவரசி
டயானா தான்!

எட்டாம் வகுப்பு வரை
படித்து விட்டு சென்றவர்களின்
எக்ஸ்ட்ரா கோளிபிசென்
இங்கிலிஸ் ஒன்றுதான்

இவர்களின்
கனவு நாயகிகள்
சிட்டியில் உலாவும்
சிட்டுகள் தான்
அவர்களால் தான்
சிட்டிசன்சிப் .
இருந்தும் ....
கலாசாரம் பேண
பெண் தேவை
அதுவும் நுனி நாக்கில்
இங்கிலிஸ் .......

மாப்பிள்ளைக்கு பெண் தேடி
ஈற்றில்
டொப் டென் போடோஸ்
அனுப்பிவைக்கப்படும்
அதில் -
ஒரு மோர்டன் கேளை
செலக் பண்ணுவார் தம்பி
வீட்டு வேலைக்கு

பெண்ணும் தனது
அடிமை வாழ்வு தெரியாது
கனவுகளுடன்
பறந்து செல்வாள்

ஊரில்
பெரிதாய் பேசப்படும்
மகளுக்கு
லண்டன் மாப்பிள்ளை 
  

Monday, November 14, 2011

ஞானம் சஞ்சிகை பார்த்து

காயல் பட்டன கசமுசாக்கள் பற்றி அடிக்கடி எல்லா சஞ்சிகைகளிலும் பார்த்து புளித்துப் போன நிலையில்  சென்ற வாரம் வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்து சிரித்து விட்டேன் .கடைசிப்பக்கத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என சற்று வாசித்து பார்த்தால் சில முஸ்லிம் இலக்கிய வாதிகளின் நிலைப்பாடு புரியும் .
எந்த விசயத்தையும் கதைப்பது இலகு .செய்வது கடினம் .அதே நேரம் சில விடயங்களை செய்வதற்கு ஆளுமை முக்கியம் .சில நேரம்  ஆளுமை குறையுமிடத்து இலக்கிய வாதி என்றால் அதிகம் விமர்சனத்திற்கு ஆளாவான்.இது தான் எங்கும் நடப்பது. அது தான் இங்கு நடந்தது .(காயல் பட்டன மாநாடு )

Tuesday, November 8, 2011

அரசியல்

பாடம் படிப்பதற்கு 
மட்டும் பிடித்திருகிறது
எனக்கு ;
ஆனால் சிலருக்கோ  
வாழ்வில் 
அநேகமான பாடங்களைக் 
கற்றுக்கொடுக்கிறது.

Friday, November 4, 2011

எனக்குள் எழும் கேள்விகள்தினமும் எனக்குள்
பல கேள்விகள் 
எழுந்து கொண்டே 
இருக்கின்றன ......

யாரிடம் கேட்பது ?
என்பது ஒரு 
கேள்வி ..............
கேட்டால் என்ன 
நினைப்பார்களோ 
என்பது மற்றொரு 
கேள்வி .............

ஏன் இவர்கள் 
இப்படி என்றொரு கேள்வி 
நாங்கள் எப்படி இருந்தால் 
உங்களுக்கென்ன 
இன்னுமொரு கேள்வி .......

மனிதர்களா  இவர்கள் 
இது எல்லோரின் 
கேள்வி .........
எவ்வளவு காலம் 
நீடிக்கும் என்பது 
தினம் ஒரு 
கேள்வி .......

இதுவா சர்வதிகாரம் 
என்பது எனது  
கேள்வி ........
ஜனநாயகத்துக்கு 
வரைவிலக்கணம் என்ன ?
இது மக்களின் 
கேள்வி ..........

கேள்வி கேட்டா 
அடி விழுமா ?
இது மாணவர்களின் 
கேள்வி .......................??????