Monday, September 26, 2011

ஊடகம்


காயல் பட்டின இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மகளிர் அரங்கில் வாசிக்கப்பட்டது .



இனி வரும் நூற்றாண்டுகள் 
இதன் ஆளுகையில் தான்
ஊடகம்
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் 
குத்திக்கூறு போட
மேற்குலகு
பயன்படுத்தும் பேராயுதம்


நாமெல்லாம் கவனிக்காது
தூக்கிப்போட்ட்         
தாக்குதல் கருவி 
மகிமை புரியாது 
புறந்தள்ளிய கூராயுதம் 
ஊடகம்
இதை 
கையாளத் தெரிந்தவன்  
உலக நாயகன் 
அனைத்தையும் தீர்மானிக்கும் 
அதி உயர் சக்தி.
  
நேற்றைகளைப் புரட்டிப்பார்க்கிறேன் 
உலகத்தூதர் பயன்படுத்திய 
அதி உச்சத்தை கான்கிறேன்
மக்களெல்லாம் ஓன்று திரட்டி 
மலைக்குன்றின் மீது நின்று
நான் இறைவனின் தூதன் 
அல்லாஹ் மட்டுமே இறைவன் 
என்று உரத்து முழங்கிட
அன்று அதி உச்ச ஊடகம்
அரபா மலைக்குன்று 
என் சமூகமே
தூதர் காட்டிய
அழகிய வழிமுறைகளை 
தூரத்தே எறிந்து விட்டு
எப்படி நிம்மதியாக 
தூங்க முடிகிறது?

உன் எதிரிகள் கீலங்கீலமாய்
கிழித்தெறிய கண்ணுற்றும்
எத்தனை நாளைக்குத் 
தொடரும்
இந்த மௌனம்.........?
உனக்கென்றொரு
தினசரிப் பத்திரிகை கிடையாது
வானொலி அலைவரிசை கிடையாது
உனக்கென்றொரு
தொலைக்காட்சி அலைவரிசை கூடக்
கிடையாது...
எப்படி -நீ 
நாளைகளை வெல்லப்போகிறாய்...?


வெறும் உணர்வுகளில் முக்குளித்து
வாய் கிழியக் கத்தினால்
உன் பிரச்சினைகள்
தீரும் என்று
எப்படித் துணிய முடியும் ?

உன் எதிரி
குண்டு வைப்பான்
வெடிக்கச் செய்வான்
பல நூறு உயிர் கொல்வான்

இங்கு -
ஊடகங்களின் வாயில் தீனி 
முஸ்லிம் தீவிரவாதி 
இஸ்லாமியப் பயங்கரவாதி 
எங்கும் தலைப்புச் செய்தி 
'முஸ்லிம் தீவிரவாதிகள் 
குண்டு வைப்பு 
நூறு பேர் கைது "


வெட்கமில்லை உனக்கு 
பிரியாணியில் கைவைக்க 

இன்று வரை சிறையில் வாழும் 
தீவிரவாதியை 
முத்திரை குத்தப்பட்ட 
அப்பாவிகளுக்காக 
என்ன குரல் கொடுத்துவிட்டாய் ?

நாளை முஸ்லிம் உயர்ந்து நிற்பான்
நாளை இஸ்லாம் -
உலகை வெல்லும் -நாளை
நாமெல்லாம் ஆட்சியாளர்கள்
எத்தனை நாளைக்கு
நாளை மீது பாரம் சுமத்தி
கற்பனையில் சரித்திரம் படைப்பது ?


உனக்கென்ன பழமிருக்கிறது இங்கு?
பாபர் மஸ்ஜித்
இடிக்கப்பட்டபோது
கோவையில் அப்பாவிகள்
கைது செய்யப்பட்டபோது
குஜராத்தில் முஸ்லிம்கள்
எரித்துக் கொல்லப்பட்டபோது
உன் -உரிமைகள் 
பறிக்கப்பட்டபோது 
உனக்காக குரல் கொடுக்க 
உனக்கென்றொரு
தனித்துவ 'ஊடகம் '
இல்லாமல் போனது 
உன் ரோசத்திக்கிலரவில்லையா? 
உலக அரங்கில்
உனக்கென்ன பலமிருக்கிறது?
முதல் கிப்லா
முற்றுகை இடப்பட்டபோது
செச்சினியா ,டாகேஸ்தான்
துவம்சம் செயியாப்பட்டபோது
பொஸ்னியா
;நிர்மூலமாக்கப்பட்டபோது 
ஆப்கான் ஈராக் தாய்லாந்து சீனா
என்று 
இன்று வரைத் தொடரும் 
அவலங்களுக்கு ................

உன்
எதிரி தருவதுதான் விளக்கம்
உன்
எதிரி சொல்வதுதான் செய்தி
உன்னைத்தீர்மானிப்பது
எதிரிகளின் ஊடகம்

உன்
குரல் வலை நசுக்கி
சப்தத்தை பறித்து
எதிரி உன்னை கட்டமைக்கிறான் 


என் அருமைச் சமூகமே
இப்போது சொல் ...
உனக்கான தனித்துவ
ஊடகத்தை -எப்போது
நிறுவப்போகிறாய்?

-ஷாமிலா ஷெரிப் -
இலங்கை .

குறிப்பு -மகளிர் அரங்கில் போலி பெண் நிருபர் படம் பிடித்ததால் என் படம் இங்கு இடம் பெறவில்லை


No comments:

Post a Comment