Tuesday, October 25, 2011

மச்சானுக்கோர் மனு


மச்சான் ,
உனக்கான என்னை 
தினமும் தயார் படுத்துகிறேன் ................
இருந்தும்..

மரத்தில் இருந்து 
விழுந்த பழத்தை 
கொத்தி பார்க்க 
நினைக்கும் காக்கைகள் 
கூட்டம் .................

ஆடு நனைதுன்னு 
அழும் ஓநாய்கள் 
கூட்டம் ..................

தானாக வந்து 
முட்டும்-எருமைகள் 
கூட்டம் ..........

பாசம் காட்டுவது போல் 
வேஷம் போடும் 
பச்சோந்திகள் 
கூட்டம் ...............

இப்படி ஒரு 
மிருககாட்சி சாலையில் 
தினமும் பயணிப்பது
சவாலாகி விட்டது ....

இந்த மனு 
உன் மேலான
 கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது .!

Monday, October 24, 2011

மௌனியாய் பயணிக்கிறேன்








இது வரை 
என் வாய்க்கு 
இப்படி ஒரு 
தாழ்ப்பாள் இட்டதில்லை நான் 
உன் பிரிவு 
எனை -
முழுமையாய் கட்டியாள்கிறது
எதை விடுவது 
எதை தொடுவது 
இல்லை -எதை 
விட்டு ஒதுங்குவது 
எதனையும்  கற்றுத்தரவில்லை நீ 
அதனால் நான் 
மௌனியாய் பயணிக்கிறேன் .......................
இப்போது எனக்குத் 
தெரிந்தது எல்லாம் 
தனித்திருந்து உன்னை நினைப்பது தான் 

Saturday, October 22, 2011

என் மச்சான் கட்டிய கூடு





என்
காதல் மாளிகையில் 
நீ -
கூடு கட்டி வசித்தாய்
நானாக ஒரு போதும் 
கலைக்க   நினைக்கவில்லை 
காலன் யாரைத்தான் 
விட்டு வைத்தான் ??
மச்சான் 
நீ -கட்டியஅந்தக் கூடு
இன்னும்........
அப்படியே ......




Thursday, October 20, 2011

கடாபி கைது

செய்து அறிந்தவுடன் சிந்திக்கலானேன் .மக்கள் விரும்பும் தலைவனாய் நடக்கத்தவறிய எத்தனை தலைகளை பார்த்து விட்டோம் .இன்னும் இது புரியாமல் பல தலைகள் ............................
கேர்னல் இறந்து விட்டதாகவும் நம்ப முடியாத செய்திகள் காலம் எத்தனை வேகமானது .சில விடயங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது 

Revolutionary Daughters - Activate - Al Jazeera English

Revolutionary Daughters - Activate - Al Jazeera English

Monday, October 17, 2011

எனக்குள் நீயான பின்னர்




எனக்குள் நீயும் 
உனக்குள் நானும் 
ஆயிரம் கற்பனைகளுடன் 
கரம் பிடித்த 
அந்த நாள் ........ 

கருமேகங்களை உள்வாங்கிய 
வானமாய் காதல்மழை 
பொழியும் 
நீ .................
அதில் முழுமையாக 
நனைய நினைத்த 
நான் ..............

இன்று 
இலக்கியத்தில் நாணம் 
தடுத்தாலும் 
இங்கு -
அரசியல் அச்சுறுத்துகிறது .




Friday, October 14, 2011

இரண்டு கவிதைகள் பற்றி

உனது வாழ்வு 
ஒரு கவிதை 
எனது வாழ்வு 
ஒரு கவிதை 
உனது கவிதையின் 
அர்த்தம் என்னால் 
புரிந்து கொல்லப்பட்டது 
அதன் உள்ளடக்கமும் 
கருத்தாழமும் 
கூடவே இலக்கண பிழைகளும் 
மிகத் தெளிவாகவே 
உள்வாங்கிக்கப்பட்டது. 
உனது கவிதையில் 
எனக்காக -நீ 
விட்டிருந்த 
இடைவெளிகளை நிரப்ப 
பொருத்தமான 
வார்த்தைகளுக்காய் நானும் 
என் கவிதையும் ...............................

Sunday, October 9, 2011

திருத்தம்



திருத்தலாம் என 
எடுத்து வந்தேன் 
கொண்டு வந்த பின்னர் 
தான் தெரிந்தது 
எல்லாம் திருத்தப்பட்டவை என்று 
அப்போது தான்
உணர்ந்தேன் 
இன்னும்  திருத்தப்பட வேண்டியது 
நான்  மட்டும் என்று 

பிரிவு



சங்க காலம் 
படிக்கையில் புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ-
எனைப் பிரிந்த போது
அன்பினைந்தினையும் 
கற்றுக்கொண்டேன்