Thursday, December 29, 2011

கவிஞர் ரஹீமாவிடமிருந்து

உள்ளத்துள்ளது கவிதை .உணர்ச்சி ஊற்றெடுப்து கவிதை .தெள்ளத்தெளிவது  கவிதை.தெரிந்த ஞானம் உரைப்பது கவிதை .இப்படி எவ்வளவோ கவிதைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் .

எழுத்துப் பணிக்கு நிறைவேது ?ஆயுள் உள்ள மட்டும் அது தொடரும் எழுதவும் எழுத்தை படிக்கவும் அதன் கருத்தைச் சுவைக்கவும் காலம் வாய்க்க வேண்டும் .
மனிதர்களின் சோம்பலை வளர்க்கவென்றே ஊடகங்கள் பல்கிப் பெருகி விட்ட நிலையில் லங்காபுரியிலிருந்து துடிப்புடன் ஒரு யுவதியின் குரல் வான உயரத்தில் நிலவின் கீறல்களாய் இறங்கி நம் மனதில் தைக்கிறது .சின்னச் சின்ன  வார்த்தைகளில் பெரிய பெரிய விடயங்களைத்துளிப்பாக்கி இருக்கிறார்
கோபம் ,எள்ளல்,இளிவரல் கவிகள் முழுவதும் விரவிக் கிடக்க தேசத்தை அவர் பார்வையில் விமர்சனம் செய்கிறார். மனிதர்களின் சாடல் ஏக்கமும் எதிர்பார்ப்புமாக  ...நண்பனுக்கு என்ற துளிப்பாக்களில்,
துளியளவும் ரசனை
 இல்லாத உனக்கு
 என்   கவிதைகள்
உனது மொழியில்
செல்லாக்காசு .......என்று ஆரம்பிக்கும் போதே அவன் நண்பனா எதிரியா என்று புரிகிறது .லண்டன் மாப்பிள்ளை ஏதோ மகிழ்ச்சியில் பூத்தது என்று எண்ணினால் ஏமாற்றம் தான் .வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசிகளாய் கவி வரிகள் இலங்கைத்தமிழுடன் ஆங்கில ஆளுமையும் கொஞ்சம் அத்து மீறல்
படக்காட்சிகளாய் நிகழ்ச்சியின் விரிவாக்கம் நூல் முழுவதும் விரவிக்கிடக்க கோபமும் ஒரு படி மேலோங்கி கனலான கவிதைகள் .எனக்குள் எழும் கேள்விகளை யாரிடம் போய்க் கேட்பது என்பதே பெரிய கேள்வியாகி ... எனக்குள் எழும் கேள்விகள் கவிதைத் தெறிப்பு .

Saturday, December 17, 2011

உன்னுடனான எனது பகிர்வுகள்

இத்தனை நாட்கள்
உன் -
தொடர்பின்றியே கழிகிறது
உன்னை எங்கு
தேடுவது ????????????
நீ
எங்கிருப்பாய் என்று
ஊகித்து -
தோற்றுப்போகிறேன்
தொடர்பில்
இருந்த நாட்களை விட
உன்னை அதிகம்
நேசிக்கிறே..........

என்னை இப்படி
அலைய விடுவது
எந்த வகையில்
நியாயம் ?

ஒரு வார்த்தை
குறுந்தகவல்
அனுப்பினால்
உன்
வங்கி மீதி
குறைந்து விடுமா ??

தெருவில் உள்ள
 பிச்சைகரர்களுக்கு போடும்
அந்த
மனது கூட
உனக்கு இல்லாமல்
போனதென்ன ?

பயணம்

எத்தனை பயணங்கள்
மறந்தது
மறக்க முடியாதது என
தொடரும்
பயணமாய் ........

பயணத்தில் சந்திக்கும்
சிநேகங்கள்
தொடர்வதும்
துண்டிப்பதும்
பயணத்தினைப்  பொறுத்ததே .....

எல்லாப் பயணங்களும்
இனிதாய் அமைய
வேண்டும் என்றே
பிராத்திக்கிறோம் ......

தற்காலிக பயணத்திற்காய்
துடிக்கும் எவரும்
நிரந்திரப் பயணம்
பற்றி
சிந்திப்பதில்லையே
 ஏன்?


Sunday, December 11, 2011

காலத்தை வென்றது எது ?கலை இலக்கியம் என்ற தோரணையில் தொடர்ச்சியான குறை குடங்களை பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்கிறோம் .எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் ,நான் வெளியிட இருக்கும் இந்நூல் பதினோராவது என்றார் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .எனக்கு தெரியாதே என்ற போது அது தான் ,நான் என அவர் பெயரைச் சொன்னார் .
இங்கு முக்கியமான விடயம் என்ன வென்றால் இலை மறை காய்கள்,நிறை குடங்கள் இப்படி பலவற்றைக்கானலாம்.முட்டை இட்டு விட்டு கொக்கரிக்கும் பெட்டைக் கோழிகள் காலத்தை வென்றனவா என சிந்திக்கின்ற போது விடை முட்டைதான் .

நண்பா நீ காலத்தை வெல்வாய்...கூடவே உனது படைப்புக்களும் வெல்லும் .

Tuesday, December 6, 2011

நட்பு
சாதனை செய்தால்
தான்
கின்னஸ் என்றால்
எங்கள்
நட்பு -
சாதனை படைக்காத
ஒஸ்கார் விருது ..........