Thursday, December 29, 2011

கவிஞர் ரஹீமாவிடமிருந்து

உள்ளத்துள்ளது கவிதை .உணர்ச்சி ஊற்றெடுப்து கவிதை .தெள்ளத்தெளிவது  கவிதை.தெரிந்த ஞானம் உரைப்பது கவிதை .இப்படி எவ்வளவோ கவிதைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் .

எழுத்துப் பணிக்கு நிறைவேது ?ஆயுள் உள்ள மட்டும் அது தொடரும் எழுதவும் எழுத்தை படிக்கவும் அதன் கருத்தைச் சுவைக்கவும் காலம் வாய்க்க வேண்டும் .
மனிதர்களின் சோம்பலை வளர்க்கவென்றே ஊடகங்கள் பல்கிப் பெருகி விட்ட நிலையில் லங்காபுரியிலிருந்து துடிப்புடன் ஒரு யுவதியின் குரல் வான உயரத்தில் நிலவின் கீறல்களாய் இறங்கி நம் மனதில் தைக்கிறது .சின்னச் சின்ன  வார்த்தைகளில் பெரிய பெரிய விடயங்களைத்துளிப்பாக்கி இருக்கிறார்
கோபம் ,எள்ளல்,இளிவரல் கவிகள் முழுவதும் விரவிக் கிடக்க தேசத்தை அவர் பார்வையில் விமர்சனம் செய்கிறார். மனிதர்களின் சாடல் ஏக்கமும் எதிர்பார்ப்புமாக  ...நண்பனுக்கு என்ற துளிப்பாக்களில்,
துளியளவும் ரசனை
 இல்லாத உனக்கு
 என்   கவிதைகள்
உனது மொழியில்
செல்லாக்காசு .......என்று ஆரம்பிக்கும் போதே அவன் நண்பனா எதிரியா என்று புரிகிறது .லண்டன் மாப்பிள்ளை ஏதோ மகிழ்ச்சியில் பூத்தது என்று எண்ணினால் ஏமாற்றம் தான் .வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசிகளாய் கவி வரிகள் இலங்கைத்தமிழுடன் ஆங்கில ஆளுமையும் கொஞ்சம் அத்து மீறல்
படக்காட்சிகளாய் நிகழ்ச்சியின் விரிவாக்கம் நூல் முழுவதும் விரவிக்கிடக்க கோபமும் ஒரு படி மேலோங்கி கனலான கவிதைகள் .எனக்குள் எழும் கேள்விகளை யாரிடம் போய்க் கேட்பது என்பதே பெரிய கேள்வியாகி ... எனக்குள் எழும் கேள்விகள் கவிதைத் தெறிப்பு .

No comments:

Post a Comment