Tuesday, January 10, 2012

நான் விரும்பும் நீ"ஓர்-அத்தியாயத்தின்
சரித்திரப் புள்ளியாக
நான் ஏன்
இருக்கக் கூடாது ?"என
விளிக்கும்
உன் சினி வாசகம்
பார்த்து -(நான் )
விரும்பும்
நீயாக
ஏன் இருக்கக் கூடாது ?
என்கிறேன் .

எதற்கு இந்த
சமூக சேவை
என்பதை விட
ஏன்
இந்தத் தேவை
இல்லாத
வேலை எனத்
தோனுகிறது
தினமும் எனக்கு .

யாருக்குமில்லாத
தேசப்பற்று
உனக்கெதற்கு ?
அதற்கு
உனக்கு கிடைத்த
பெயரும் -நீ
அறியாததல்ல .
அதை -உன்
பற்று நீக்கிவிடுமா?
யார்
எப்படிப்போனால் தான்
உனக்கென்ன
வந்துவிடப்போகிறது ?

நீ
காட்டும் பற்றுக்கள்
உன்னை
வாழவைத்ததா???

யாரை
நம்பக்கூடாதென்று
மார்க்கம் பயின்ற
உன்னாலும்
நம்ப முடியாது
போனதேன் ?

உன்னிடம்
கேட்பதெல்லாம்
ஒன்றே ஓன்று
நான் விரும்பும்
நீயாக
ஏன் இருக்கக் கூடாது?
நாக்கு


எவ்வளவு
அழகான பெயர்
இதற்கு
அப்படி ஒன்றும்
பேசதெரியாது !
நரம்பில்லை
அதனால்
எப்படியும்  பேசும் !

Saturday, January 7, 2012

மாறுதல்கள்கடும் வரசியிட்குப் பின்
பெய்த மழை போல
உன் வரவு -அதனால்
என்னவோ
செழிப்படைந்தது உள்ளம்


மாரி காலத்து
அடை மழை போல
ஓயாத குறுந்தகவல்
தொலைபேசியில்
பார்த்து- தினம் தினம்
நெகிழ்வடைந்து நின்றேன்

வசந்த காலங்களை
மீட்டிப் பார்க்க வைத்தது
உன் நட்பு .
செய்தி கண்டு
நீண்ட நாட்களுக்குப் பின்
என் கவிதை
அலங்கரிக்கப்பட்டது .

மழையில் நனைந்து
குளிரில் நடுங்கி
உறவாடிய -அந்த நாட்கள்
கார்கால மேகங்களை
தொட்டுவிட்டுச் சென்றது .

இப்பொழுதெல்லாம்
ஏனோ
ஆங்காங்கே ...
தூறல்கள் மட்டும் .  

நினைவின் விளிம்பில்

காதல் கவி -எழுதவில்லை
உனைக் காணும் வரை
கண்ணீர்க் கடலில்
மூல்கவுமில்லை
காதலிக்கும் வரை

சங்க காலம்
படிக்கையில் -புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ- எனைப்பிரிந்த போது
அன்பினைந்தினையும்
அறிந்து கொண்டேன் .

உன் -
திருமணச் சேதி
காதிலடிபட்டபோதும் -நான்
கணக்கெடுக்கவில்லை
அது தான்-உனக்கு
விதியென்று !

இன்று
காலம் பதில் சொன்னாலும்
காத்திருப்பேன் என
காதல் கடிதங்கள்
பறை சாற்றினாலும்
நீ -
இப்போது
நீயாக இல்லை
அதனால்
நானும் நானாக இல்லை 

அவளுக்கொரு வேலை வேண்டும்

எல்லோரும்
வேலை பார்கிறார்கள்
அதனால் -அவளுக்கும்
ஒரு 
வேலை வேண்டும்

விண்ணப்பித்தாள்
தகுதி இல்லாதவரும்
தகுதியிட்கு மீறிய
வேலை பார்க்கின்றனரே
என்ற வீராப்பில்
விண்ணப்பித்தாள்

பல -
'அப்பய்மன்ட்'கள்
வந்தன !
வேலைக்கல்ல-
அரசியல் வாதிகளை சந்திக்க !!! 

புரிதல்கள்

உனக்கான ஏற்பாடுகள்
என் மனதில்
பலமாய் .......
என்னுடைய அசைவுகளில்
உன் -
புரிதல்களின் கீறல்கள்
விசாலமாய்....

எதனைச் செய்ய
முனைந்தாலும்
உன்னிடம்
அனுமதி பெற
துடிக்கிறேன்!-பல
தொடர்பாடல்
வலையமைப்புக்கள் -நம்
கைவசம் இருந்தும்
வேளைக்கு
தொடர்பு கொள்ள
முடியாமல் போகிறேன்

இது விதியா?
உன் -
மதியால் வெல்லமுடியாததா?
சதி என்றால் -எனக்கு
இது தான் கதியா?

இத்தனை கேள்விகளை
கேட்டு விட
உந்தித் தள்ளுகிறது
என் ஆன்மா!
உன் நிலைமை
அறிந்ததனால்
வெட்கித் தலைகுனிகிறது
என் பேனா .