Wednesday, September 28, 2011

யார் எழுத்தாளன் ?




கையில் பேனை 
எடுத்தவரெல்லாம்  எழுத்தாளனா?
இல்லை -
கண்டதையெல்லாம் -எழுதித் 
தள்ளுபவன் எழுத்தாளனா ?

அலுவலகத்தில்
இலிகிதர் வேலை பார்ப்பவன்
எழுத்தாளனா?
அல்லது 
ஆவலில் இலக்கியம் படைக்க 
எழுதுபவன் எழுத்தாளனா?

சாதனை படைக்க
வேண்டும் என்று எழுதுபவன் 
எழுத்தாளனா?
சோதனையில்-
வேதனையை வெளிப்படுத்த
எழுதுபவன் எழுத்தாளனா? 

தன்னை 
அறிமுகபடுத்த எழுதுபவன்
எழுத்தாளனா?
எழுதியதனால்
முகவரியையே தொலைத்தவன்
எழுத்தாளனா ?

எழுதி எழுதி
தனக்கென இடத்தை
பிடித்தவன் எழுத்தாளனா?
பார்த்து பார்த்து
எழுதி -
பரிசு பெற்றவன் எழுத்தாளனா?

எழுதியதற்கு
அடையாளமாய் நூலொன்றை
உருப்பெறவைத்தவன் எழுத்தாளனா?
அந்நூலினை
விற்பதட்காய் அலைந்தவன்
எழுத்தாளனா ?

எழுத்தாளனுக்காய்
இரங்கற்பா எழுத
யாருமில்லை
 நீயும்
எழுதிப்பார் புரியும்
யார் எழுத்தாளனென்று !


குறிப்பு :இலங்கையில் எழுதாட்டியும் சாகித்திய பரிசு கிடைக்கும்

7 comments:

  1. சாகித்திய பரிசு கிடைக்க எழுத வேண்டியதில்லை சகோதரி !
    சிபாரிசு இருந்தா போதுமுங்க !!!!!!!!!!!இல்லன செலெக்சன் குழு ல இருக்கணுமுங்கோ அக்கா !!!!OOOOOOOOOOOOOppppppppppppppsssssssss:p

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. ஷாமிலா..இது பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை காரணம் காக்கா பிடிப்பவர்களுக்கும்,பின்கதவால் வருபவர்களுக்கும்,அல்லது அவர்களின் வேலையாட்களைப் போல் அவர்களுக்குப் பின்னால் அலைபவர்களுக்கும்,வால் பிடிப்பவர்களுக்கும்.இல்லாத பொல்லாதவற்றை அள்ளி வைப்பவர்களுக்கும்,வாயால் கேட்டு சண்டைபிடிப்பவர்களுக்கும் இவ்வாறான பரிசுகள் கிடைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஷாமிலா உங்கள் இந்த கவிதையினையும் கருத்துக்களையும் முகப்புத்தகத்தில் குறிப்பிடுங்கள் அது நிறையப் பேரை சென்றடையும்.....

    ReplyDelete
  4. உங்கள் கவிதைக்கு அழகு அதில் கவிழ்ந்து கிடக்கும் அழகிய திமிர்தான்.வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பதால் உங்கள் கவிதைகளின் உயிர் ஊசலாடவில்லை.ஊஞ்சலாடுகிறது.........

    தொடர்ந்து எழுதுங்கள்
    சமூகம் உங்களை காயப்படுத்தும்
    தொடர்ந்து எழுதுங்கள்
    சமூகம் உங்களுக்கு சமாதிகட்டும்
    தொடர்ந்து எழுதுங்கள்
    இலக்கியம் உங்களை இருட்டடிக்கும்
    தொடர்ந்து எழுதுங்கள்
    உங்கள் பெயரை கேட்டால் சிலருக்கு தீப்பிடிக்கும்
    அதையும் தொடர்ந்து எழுதுங்கள்
    காலம் உங்களுக்கு கல்வெட்டு செய்யும்.

    ReplyDelete
  5. நன்றி அஸ்மின்.நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்

    ReplyDelete
  6. நன்றாக புரிகிறது உங்கள் உங்கள் வேதனையின் விரக்தி
    ஒரு கவிதையையோ அல்லது ஒரு கட்டுரையோஎழுத்தி விட்டு
    நானும் ஒரு சிறந்த எழுத்தாளன் என்கின்றனர் சிலர் அவர்களுக்கு இது புரியட்டும்.

    ReplyDelete