Monday, September 26, 2011

காட்டான் எனும் நாட்டான்




நகரத்துச் சிலருக்கு 
நாகரிகமாய் உரைக்கவும்
நக்கலாய் அழைக்கவும் 
ஒருவன் -அவன்
காட்டான் எனும் நாட்டான் 


விஞ்ஞானம் படித்து -நகருக்கு  
மெய்ஞ்ஞானம் போதிக்க வந்தவன்
நாட்டான்
வருத்தமெனின் தன் கருமத்தையும் பாராது 
மருத்துவம் பார்ப்பவன் 
நாட்டான்

கட்டிடம் குட்டிச் சுவராகமுன்
அதனை மட்டிட்டவன் 
நாட்டான் 
பட்டணத்தில் பெட்டிக்கடை வைத்து 
காசை கொட்டிக் கொண்டவர்களை
தட்டிக் கேட்காதவன்
நாட்டான்

பாடம் புகட்ட வந்து
பாடம் கற்றுக்கொண்டவன்
நாட்டான்
ஏற்ற இரக்கமின்றி
மாற்றங்களை ஏற்றுக்கொண்டவன் 
நாட்டான் 


வோட்டுக்களை வென்று 
நாட்டுக்கு சேவை செய்பவன் 
நாட்டான்
பாட்டுக்களை கேட்டாலும் 
நாட்டு நடப்புக்களை 
அறிந்தவன் நாட்டான்

கல்விமான்களை கவரிமான்களை 
நினைப்பவன்
நாட்டான்
கல்வியல் கரைகானத்துடிக்கும்
நீச்சல்காரனும்
நாட்டான்

இத்தனைக்குள்ளும்
கிராமத்தில் படித்தவனை
நகரத்துச் சில முட்டாள்கள்
அழைக்கும் வார்த்தையும்
நாட்டான்!!
இவற்றையெல்லாம் அறிந்திராதவனும்

காட்டான் எனும் நாட்டான்

2 comments:

  1. கண்டிப்பா இணைந்திடலம்.என் படைப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தை வரவேட்கிரன் சார்

    ReplyDelete
  2. வாங்க பழகலாம் என்கிறத இவ்வளவு ஸ்வீட் ஆ....... சொல்லலாமா?@சீனுவாசன்.கு sir!!!!!!!!

    ReplyDelete