Saturday, February 18, 2012

உனக்கு நிகர் நீ...!



உனைப்பற்றி
எழுத நினைத்த போது
ஒரு கணம்
தமிழ் மறந்து போய் விட்டது
எனக்கு .

சிங்கத்தின் அவையில்
சிற்றெறும்பு
கவி பாடுமா?

இருந்தும்
வானத்து மழையா ?
இல்லை
மடை திறந்த வெள்ளமா?
சிந்தித்து சிந்தித்து
'நயாகரா' என
ஆறுதல் கொள்கிறது
என் மனது

உனை
இலக்கியச் சிறைப்பிடிக்க
நினைத்து
ஆயுள் கைதியானேன்
நான் !

இலக்கணம் எதுவுமின்றி
தலைக்கணத்துடன்
சந்தமின்றி
நேற்றுப்  பெய்த
 மழைக்கு-தளிர் விடும்
காளான்களுக்கு
மத்தியில்
உனக்கு நிகர்
நீயே தான் .

கலை நீரை
உள்வாங்கிய
கருமேகமாய்
கவி மழை பொழியும்
உனக்கு -கொடுக்க
எதுவுமில்லை
என்னிடம்
அதனால்
வடித்திருக்கிறேன் .

வார்த்தைகள்
தடுமாறுகின்றன -என்
கவி வாசல் மூடப்பட்டு
திறந்திருப்பது
உன் ஆற்றல் மட்டும் தான்
நுழைவதற்கு
நான் தகுதியானவள்
அல்ல .
தோற்று திரும்பி போகிறேன் .













1 comment: