Monday, September 26, 2011

சொல்லாமலே............



எனக்குள் தேங்கிக் கிடக்கும்
ஏக்கப் பெருமூச்சுக்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்க
பல தடவை நினைக்கிறது.......
அணை போட்டு
தோற்றுப்போகிறேன்

எதையும் ஆராயாது
எப்படியும் பேசும்
பண்டிதர்கள்...... 
எதுவுமே புரியாது
மாற்றாரின் கதைகளையே நம்பும்
பாமரர்கள்......
தெருவில் பேச்சுக்குப்பை பொறுக்கும்
வேலையில்லாக் கூலிகள்
இவர்களுடன் சேர்ந்து
மொட்டத்தலைக்கும்
முடங்காலுக்கும்
முடிச்சுப்போடும்  
உறவினர்களில் சிலர் 
இவர்களை அறியக்கிடைத்தமை 
என்-
இலக்கியப்பரவளுக்கு கிடைத்த 
மிகப்பெரிய வெற்றி  


யுத்தத்திற்குப் பின் 
எழுதுவதற்கு 
கரு இல்லாமல் தவித்த 
நான் 
இன்று இலக்கியத்திற்கு 
முற்றுப்புள்ளி
 வைக்கமுடியாமல் 
தவிக்கிறேன் .

No comments:

Post a Comment