Saturday, February 11, 2012

புரட்டாத பக்கங்கள்



உன் வாழ்க்கைச்
சரித்திரத்தின் 
அந்தப் பக்கங்களை 
புரட்டிப்பார்க்கிறேன் 

பள்ளிக்காலம் 
பாடம் கற்றுத்தரவில்லை 
பருவ வயது 
பக்குவப்படுத்தவில்லை 
இணைப்பாடவிதானம் 
ஈடுகொடுக்கவில்லை 
உறவுகள்
ஊ க்கப்படுத்தவில்லை 
உணர்வுகள் 
உறுதிப்படுத்தவில்லை 
நீ நீயாக இல்லை .

தோழனே ,
எடிசனுக்கு ஊகக்கம் 
தந்தவர் யார் ?
ஆப்ரகாம் லிங்கன் 
எப்படி ஜனதிபதியானான் ?
சோக்ரடீசுக்கு
தத்துவம் 
பயிற்றுவித்தவர் யார்?
இவை உனக்குள் நீ 
தொடுக்கவேண்டிய 
வினாக்கள்.

நண்பனே 
நட்புக்கள் -உன் மீது 
நாட்டியம் பயின்றாலும் 
நடை பயில வேண்டியது 
நீ தான் .

உன் உதவும் கரங்கள் தான்
உனக்கு முதுகெலும்பு 
உறுதியோடு போராடு 
விளக்கில் விழுந்து சாக -நீ 
விட்டில் பூச்சியல்ல .
பாரெங்கும் பறந்து திரியும் 
பட்டாம் பூச்சி என்பதை 
புரிவாய் . 

1 comment:

  1. //உன் உதவும் கரங்கள் தான்
    உனக்கு முதுகெலும்பு
    உறுதியோடு போராடு
    விளக்கில் விழுந்து சாக -நீ
    விட்டில் பூச்சியல்ல .
    பாரெங்கும் பறந்து திரியும்
    பட்டாம் பூச்சி என்பதை
    புரிவாய் . // மிக அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் சகி!

    ReplyDelete